முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர் விருதுநகர் வட்டம் சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தலைமையில் நடைபெற்றது.
 மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:-
 தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் (30.01.17) இன்று அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி அவர்கள் தொழுநோயாளிகளுக்கு ஆற்றி சேவையைப் போற்றும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
 இந்தத் தொழுநோயானது காற்றின் மூலம் மைக்ரோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியினால் பரவுகிறது. இந்த நோய் தொற்று ஏற்பட்டால் முதலில் தேமல், படை போன்ற தோல் நோய்கள் ஏற்படும். தேமல், படை ஏற்பட்ட இடங்களில் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மேற்கண்ட அறிகுறிகள் உடல்பகுதிகளில் தென்பட்டால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி (றுர்ழு – றுழசடன ர்நயடவா ழுசபயnணையவழைn) மல்டி டிரக் தெரபி எனப்படும் சிகிச்சை தற்போது தொழுநோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகள் மூலம் தொழுநோய் முற்றிலும் குணப்படுத்தப்படுகிறது.
 பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதும் இந்த கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
 தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
 முன்னதாக தொழுநோய் விழிப்புணர்வு ரதத்தை (பிரச்சார வாகனம்) மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 13 வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்ட கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
 இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை)  ரேஷ், இணை இயக்குநர்(நலப்பணிகள்) மரு.தங்கராஜ், துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.அமுதா, துணை இயக்குநர் (மருத்துவம்) மரு.முத்துவீரலட்சுமி, துணை இயக்குநர்கள் (சுகாதார பணிகள்) மரு.பழனிச்சாமி (விருதுநகர்), மரு.கலுசிவலிங்கம் (சிவகாசி), மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்  கனகராஜ், வட்டாட்சியர்(விருதுநகர்)  .சங்கரபாண்டியன்  உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்