நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சாலை விபத்தில் மரணமடைந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ.1.00 லட்சம் நிதியுதவி:கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      நாமக்கல்
4

நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (30.01.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம்  தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும்,  புதிய குடும்ப அட்;டைகள் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 508 மனுக்கள் வரப்பெற்றன.நாமக்கல் வருவாய்;க் கோட்டாட்சியர் அலுவலகத்தின் சார்பில் எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் மரணமடைந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ.1.00 இலட்சம் சாலை விபத்து நிவாரண நிதியுதவியும், ஒரு பெண்ணிற்கு ஆதரவற்ற விதவை சான்றினையும், நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 20 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் கலெக்டர் மு.ஆசியா மரியம்  வழங்கினார். அதனை தொடர்ந்து  கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம்  நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை  பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ.3,000 வீதம் ரூ.12,000 மதிப்பிலான காதொலிக் கருவிகளையும், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 50 பயனாளிகளுக்கு ரூ.1,12,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், குடும்ப அட்டைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளையும் கலெக்டர் மு.ஆசியா மரியம்  வழங்கினார்.இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் டி.கே.ராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன், உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: