சேலம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      சேலம்
3

சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (30.01.2017) கலெக்டர் வா.சம்பத்,  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு கலெக்டர்  அவர்கள்  தெரிவித்ததாவது.   தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பொதுமக்களை விரைந்து சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இன்றைய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,56,000/- அதிநவீன செயற்கை கால்கள் மற்றும் 100 சதவீத பார்வையிழந்த மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும் வழங்கப்பட்டது. இன்றைய தினம் பொதுமக்களிடமிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 548 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இந்த மனுக்களை  தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி உடனடி தீர்வுகான உத்தரவிடப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரவிக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பி.டி.சுந்தரம், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமதுரைமுருகன், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: