முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் கே. விவேகானந்தன், தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      சேலம்

தருமபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (30.01.2017) கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக மேல்நிலைத் தொட்டி அமைத்தல், புதிய ஆழ்துளை கிணறு, தகனமேடை, குடிநீர் வசதி, மின் வசதி, பட்டா வேண்டுதல், கல்வி உதவி தொகை, தரைமட்ட பாலம், மூன்று சக்கர வண்டி, ஓய்வூதிய தொகை, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பேருந்து வசதி, குழந்தைகள் நல மையம், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி மற்றும் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் என மொத்தம் 308 மனுக்களை  பெற்று சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உடனடி தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  அ. சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  பாப்பாத்தியம்மாள், தனி துணை ஆட்சியர்; (கலால்)  மல்லிகா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்  அமீர்பாஷா, கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)  சித்ரா, முன்னோடி வங்கி மேலாளர்  முத்தரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago