முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர்; திருக்கோவில் திருத்தேர் வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெள்ளோட்டம் முன்னேற்பாடு பணிகள் நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ஆய்வு

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் தேர் அச்சு முறிந்ததையடுத்து கடந்த 57 ஆண்டுகளாக தேரோட்டம் இல்லாமல் மாசி மக உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு நிதி ரூ 10 லட்சம், பொதுமக்கள் நன்கொடை ரூ 50 லட்சம் என ரூ 60 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டு தேர் வெள்ளோட்டம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற உள்ளது

தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சிக்காக தேரோட்ட வீதிகளை சீரமைக்கும் பணி, தேரோட்டத்தைக் காண வரும் மக்களுக்குத் தேவையான சுகாதாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ஆய்வு செய்து தேரோடும் சாலையில் தேர் வெள்ளோட்டத்திற்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்

வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி வேதாரண்யேஸ்வரர் கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளதையொட்டி வேதாரண்யம் தாலுக்காவில் உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார் இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, வட்டாட்சியர் இளங்கோவன், நகராட்சி ஆணையர் முகமதுஇப்ராகீம் திருக்கோவில் செயல்அலுவர் மணவழகன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் வந்திருந்தனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்