முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி தீவிரபடுத்த கோரிக்கை

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோடு வழியாக தினமும் நூற்றுக்கணக்கான ரெயில்கள் வந்து செல்கின்றன. ஈரோட்டில் இருந்து வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு ரெயில்களில் செல்ல வசதி உள்ளதால் ஏராளமானவர்கள் ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் நடைமேடைக்கு செல்ல வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாக ஏறி செல்ல வேண்டும். முதலாம், 2–ம் நடைமேடைக்கு செல்லவும், 3–வது, 4–வது நடைமேடைக்கு செல்லவும், பார்சல் அலுவலகம் மற்றும் ரெயில்வே காலனி பகுதிக்கு செல்லவும் தனித்தனியாக 3 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை

 

 

 

படிக்கட்டு வழியாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏறி, இறங்குவதற்கும், பார்சல் பொருட்களை கொண்டு செல்வதற்கும் மிகவும் சிரமம் ஏற்பட்டதால் ரெயில் நிலையத்தில் 2 பளுதூக்கிகள் (லிப்ட்) அமைக்கப்பட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 2 பளுதூக்கிகளும் பழுதடைந்து பயனற்று போனது. எனவே பழுதடைந்த பளுதூக்கிகளை சரிசெய்ய வேண்டும் அல்லது நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ரெயில்வே நிர்வாகம் முதலாம், 2–வது மற்றும் 3–வது, 4–வது நடைமேடைகளுக்கு 2 நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதையொட்டி பழுதடைந்த 2 பளுதூக்கிகளும் முதலில் அகற்றப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்காக பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி குழிகள் தோண்டப்பட்டன.நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி தொடங்கி பல மாதங்களாகியும் பணி மந்தமாகவே நடந்து வருகிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ரெயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த காங்கிரஸ் சிறுபான்மை துணை தலைவர் கே.என்.பாட்ஷா கூறியதாவது–ஆமை வேகத்தில் பணிகள்

 

 

 

ஈரோடு ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் படிக்கட்டு வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். பார்சல் பொருட்களை படிக்கட்டு வழியாக கொண்டு செல்ல சிரமமாக உள்ளதால் ஊழியர்கள் தூக்கி வீசுகிறார்கள். இதனால் உடையும் தன்மையுடைய பொருட்களை பார்சலில் அனுப்ப பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள்.

 

இந்தநிலையில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி தொடங்கியதால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. நகரும் படிக்கட்டு அமைக்கும் இடத்தில் பாறைகளாக இருந்த காரணத்தினால் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளங்களுக்கு அதிர்வினால் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்று மெதுவாகவும், கவனமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் நகரும் படிக்கட்டு பொருத்துவதற்கு தேவையான இடத்தை தயார்செய்ய பொக்லைன் எந்திரம் மூலம் குழிதோண்டும் பணி 2 மாதங்களாக நடந்தது. தற்போது 3–வது, 4–வது நடைமேடையில் குழிதோண்டும் பணி முடிவடைந்து விட்டது. அங்கு கான்கிரீட் அமைப்பதற்காக கம்பிகள் பொருத்தப்பட்டு உள்ளன. எனவே கட்டுமான பணிகளை விரைந்து முடித்தால் பயணிகளுக்கு மிகவும் பயன்உள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்