முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் இந்த சீசனில் 40 ஆயிரம் பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தகவல்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் இந்த சீசனில் 40 ஆயிரம் பறவைகள் வந்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

இச்சரணாலயத்தில் பறவைகள் வந்து செல்வதற்குரிய தட்பவெட்ப நிலையும் சதுப்புநிலப் பகுதியில் பறவைகள உண்பதற்குரிய மீன்களும் புழு பூச்சிகளும்; கிடைப்பதால் பறவைகள் இங்கு வந்து செல்கின்றன.

 

இதில் ரஷ்யா-ஆர்ட்டிக் பகுதியிலிருந்து 45 வகையான உள்ளான் இன பறவைகளும், 8 வகையான வாத்துகளும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து கடல் ஆலா, கடல்காகம் பிளமிங்கோ போன்ற பறவைகளும், அதிகமாக வருகின்றன.இந்த ஆண்டு சீசனில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வனத்துறையினர் என 80 பேர் ஈடுபட்டனர் இந்த கணக்கெடுப்பில் 49 வகையான பறவை இனங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளது தெரிய வந்துள்ளது

இது குறித்து கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் செய்;தியாளர்களிடம் கூறியதாவது:- வடகிழக்கு பருவமழை குறைந்ததால் இந்த ஆண்டு பறவைகள் வருகை கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் ஒரு லட்சம்; பறவைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது

இதில் ஊசிவால் இனத்தைச் சேர்ந்த பறவைகள் 10 ஆயிரமும், உள்ளான் இன பறவைகள் 6 ஆயிரமும், பிளமிங்கோ 2ஆயிரத்து100, கடற்காகம் 2 ஆயிரமும், கடல் ஆலா இரண்டாயிரமும் சிப்ட் பறவைகள் 600-ம், கூழைக்கிடா 700-ம், இந்தியன்பீட்டா பறவைகள் 500-ம் மற்றும் செங்கால்நாரை, கரண்;டிமூக்குநாரை போன்ற 41 வகையான பறவைகள் உள்பட 40 ஆயிரம் எண்ணிக்;கையில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகள் கோடியக்கiர் சரணாலயத்திற்கு வந்துள்ளதாக வனத்துறையினரின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்றார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்