முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை மருந்தகங்கள்:

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.பிப். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியிலுள்ள கிழவனேரி மற்றும் வையூர் ஆகிய கிராமங்களில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்கள்:

மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள கிளை கால்நடை மருத்துவமனைகள் அனைத்தும் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டபேரவையில் அறிவித்திருந்தார்கள்.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிலுள்ள கிழவனேரி,பேரையூர் தாலுகா வையூர் கிராமங்களில் செயல்பட்டுவந்த கிளை கால்நடை மருத்துவமனைகள் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டன.இங்கு கால்நடை மருத்துவர்,மருத்துவ உதவியாளர் மற்றும் மருத்துவ பணியாளர் பணியமர்த்தப்பட்டு கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருத்து சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளது.மேலும் தரம் உயர்த்தப்பட்ட இவ்விரு கால்நடை மருந்தகங்களுக்கும் ரூ.46லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்துவைத்தார்:

அதன்படி திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கிழவனேரி,வையூர் கிராமங்களில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களின் துவக்க விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அதிநவீன கால்நடை மருந்தகங்களை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.பின்னர் கால்நடை மருத்தகத்திற்கு வந்திருந்த  கால்நடைகளுக்கு நோய்தடுப்பு மருந்துகளையும்,தீவனங்களையும் வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றினார்.அப்போது அமைச்சர் பேசியதாவது: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகஅரசு மேற்கொண்ட சீர்மிகு நடவடிக்கைகளின் காரணமாக தமிழர்களின் பாரம்பரியம் காக்கப்பட்டுள்ளது.இதற்காக டெல்லி சென்ற முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்திட வலியறுத்தி நடைபெற்றுவரும் போராட்டஙகள் குறித்து எடுத்துரைத்து, பிரதமரின் ஒத்துழைப்போடு இந்தியாவிலே இவ்வளவு விரைவாக அவசர சட்டமொன்று நிறைவேற்றப்பட்டதென்றால் அது ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்துகிற அவசர சட்டம் தான்.இதை தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் சின்னம்மா வழகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடத்திட நிரந்த சட்டம் திருத்தம் கொண்டு வந்திட இந்திய அரசியலில் இதுவரை இல்லாத அளவில் கவர்னர் உரை நடைபெறுகிற அன்றே சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தி நிரந்தர சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு,அது தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றிட இருக்கிறது.இதன் மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திட நிரந்தர தீர்வு கிடைத்திருக்கிறது என்று பேசினார்.

கலந்து கொண்டோர்:

இந்நிகழச்சிகளில்மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணைஇயக்குனர் பாலச்சந்திரன்,உதவி இயக்குனர் பன்னீர்செல்வம்,மாவட்ட கழக துணைச் செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழசெல்வம்,திருப்பதி,திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் வக்கீல். அன்பழகன்,திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராம்சாமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணை சேர்மன் டாக்டர்.பாவடியான்,முன்னாள் ஒன்றிய செயலாளர் பாண்டியன்,எல்.டி வங்கி தலைவர் கபி.காசிமாயன்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,ஒன்றிய அவைதலைவர் அன்னகொடி,துணை செயலாளர் சுகுமார்,உரப்பனூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன்,முன்னாள் திருமங்கலம் சேர்மன் நிரஞ்சன்,கட்சி நிர்வாகிகள் வக்கீல்.பாஸ்கரன்,வேம்புவேந்தன்,துர்காதேவன்,தர்மர்,நாகலெட்சுமி,பி.ஆர்.சி.கணேசன்,கேபிள்முரளி,சிவன்காளை,வேல்முருகன்,சிவன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்