முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோயிலில் 18 நாள் உண்டியல் காணிக்கை வருவாய் 48.97 லட்சம்.

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் திங்கள் கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ.48 லட்சத்தை தாண்டியது.

      ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தம் பணம் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.ஜனவரி மாதம் ஐய்யப்பா பக்தர்கள் அதிக வருகையொட்டி பக்தர்கள் செலுத்திய பணம் உண்டியல்களில் நிறைந்ததால் கடந்த 12 ஆம் தேதி உண்டியல்கள் திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதனையடுத்து கடந்த 27 ஆம் தேதி அமாவாசை நாள் மற்றும் முக்கிய திருநாள்களை முன்னிட்டு திருக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.இவர்கள் திருக்கோயிலிலுள்ள ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் மற்றும் இதர சுவாமிகள் சன்னதியிலும்,அதுபோல திருக்கோயிலின் உபகோயிலான கோதண்டம்ராமர்கோயில்,நம்புநாயகி அம்மன் கோயில் ஆகிய கோயில்களிலுள்ள உண்டியல்களில் காணிக்கையாக செலுத்திய பணம் 18 நாட்களில் நிறைந்தது.இதனையொட்டி உண்டிகள்களை  பரமக்குடி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசாமி மற்றும் ராமநாதபுரம் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தரேஸ்வரி,ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ்  ஆகியோர்கள் முன்னிலையில் திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில்  திங்கள் கிழமை திறந்து எண்ணப்பட்டது.  இதில் பழைய ரூ.500 மற்றும் வெளிநாட்டு பணம் உள்பட ரொக்கமாக  ரூ.48,லட்சத்து 97  ஆயிரத்து 566 மும், 23 கிராம் தங்கமும், 3 கிலோ 870 கிராம் வெள்ளியும்  கிடைத்தது.உண்டியல்கள் திறந்து எண்ணும் பணியில் திருக்கோயில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன்,  காசாளர் ராமநாதன் மற்றும் திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ்,ராஜாங்கம்,பாலசுப்பிரமணியன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன்,அலுவலர் மாரியப்பன் உள்பட திருக்கோயில் பேஷ்கார்கள் கலைச்செல்வம்,அண்ணாதுரை, செல்லம், மற்றும்  பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும்,இந்தியன் வங்கி ஊழியர்களும் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்