முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

  தேனி.- தேனியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், மனிதநேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,  தலைமையில் நடைபெற்றது.

 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தலைமையுரையில் பேசும் போது தெரிவித்ததாவது, மனித சமுதாயத்தின் வளர்ச்சி, முன்னேற்றம், கலாச்சாரம் போன்றவற்றை பள்ளி மாணவ, மாணவியர்களிடையே எடுத்துரைப்பதற்கும் பல்வேறு போட்டிகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் சமூக நல்லிணக்கம் அனைவரிடத்திலும் வளர வேண்டும் என்பதற்காகவும், எல்லோரும் சுமூகமான உறவுகளை வளர்த்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும், கருத்து வேறுபாடுகளை மறந்து வளர்கின்ற சமுதாயத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு உதவிட முன் வரவேண்டும் என்பதற்காகவும் ஆண்டுதோறும் ஒரு வார காலம் மனிதநேய வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இவ்விழா 24.01.2017 முதல் 30.01.2017 வரை ஒரு வார காலம் கொண்டாடப்பட்டு இன்று நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசு அனைவரையும் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் அடைந்தவர்களாக மாற்றுவதற்காகவும், வளர்ந்த நாடுகளை போன்று நமது மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் கல்வி அறிவு அடிப்படையாகும் என்பதனை அடிப்படையாக கொண்டு கல்வி அறிவினை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவும் பள்ளி கல்வித்துறைக்கு ஏராளமான நிதி ஓதுக்கீடு செய்து, விiயில்லா சீருடை, குறிப்பேடுகள், புத்தகம், பென்சில், பேனா, வரைபடங்கள், கணித உபகரணங்கள், மடிக்கணினி போன்றவற்றை வழங்கி வருகிறது. குழந்தைகள் கல்வி கற்கும் போதே நமது முன்னோர்கள், தாய் தந்தையர்களுக்கு மதிப்பளித்து அவர்கள் கற்றுத்தரும் நற்பண்புகளை வளர்த்து, தனக்கு மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினரும் பயன்பெறும் வகையில் வாழ வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தொழில் திறன் வளர்ப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு விலையில்லா தையல் இயந்திரங்களும், தேய்ப்புப் பெட்டிகளும், ஆதிதிராவிடர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திடுகின்ற வகையில் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதார ரீதியாகவும், கல்வி அறிவின் மூலமும் மேன்மையடைந்து நமது சமுதாய மற்றும் மாநிலத்தின் பெருமை உலக முழுவதும் அறியச் செய்திட வேண்டும். இயற்கை ஈடர்பாடுகளில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து பொதுமக்;களும தேவையான உதவிகளை செய்து மனித நேயம் வளர செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,  தெரிவித்தார்.
இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சர்hபில் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, பாடல் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,  வழங்கினார். மேலும், விழாவின் முடிவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
  இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி.கிருஷ்ணவேணி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கண்ணன் விழிக்கண் உறுப்பினர் சுப்ரமணியன் கவிஞர்.வால்கிங் தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர்) திருமதி.ராணி அவர்கள் உட்பட விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்