முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி விட்டார்: நாராயணசாமி

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, பண மதிப்பு நீக்க நடவடிக்கை மோடி பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி விட்டார் புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி குற்றச்சாட்டு.

பண மதிப்பு நீக்கம் மக்கள் படும் வேதனை என்ற தலைப்பில் காங்கிரஸ் சார்பில் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது.

மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார், ரகுமான்கான் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கருத்தரங்கை தொடங்கி வைத்து புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி பேசியதாவது:-

பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தொழிலாளர்கள் விவசாயிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் உள்பட எல்லா தரப்பினருமே பாதிக்கப்பட்டு உள்ளனர்.ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தான் அதிக அளவு புழக்கத்தில் இருந்தது. அதை ஒழிக்கும் போது அதற்கு ஏற்றாற்போல் மாற்று நடவடிக்கை செய்யவில்லை.உற்பத்தி குறைவு, வேலையிண்மை போன்றவற்றால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதை எதிர்த்து பெரிய அளவில் மக்கள் போராடவில்லையே என்கிறார்கள்.

அதற்கு காரணம் மோடி அரசு சர்வாதிகார அரசு. அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டும் அரசு, மக்கள் தங்கள் உணர்வுகளை வருகிற தேர்தலில் வெளிக்காட்டுவார்கள். வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் புதுவையில் 35 சதவீதம் வரி வசூல் குறைந்து உள்ளது.எங்கள் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அடிக்கடி வருவதற்கு காரணம் தலைமைக்கு கட்டுப்பட்டு அனைவரும் செயல்படுகிறோம். கருத்து வேறுபாடுகளை எங்களுக்குள்ளேயே பேசி தீர்த்து கொள்கிறோம்.தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்கள், இளைஞர்கள் மூலம் மிக கண்ணியமாக நடத்தப்பட்டது.புதுச்சேரியிலும் அதே போல் நடந்தது. நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முடித்து வைத்தோம். தமிழ்நாட்டில் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு விட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்