முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 பேருக்கு மரண தண்டனை அளித்த ஐ.எஸ் தீவிரவாதியை ஈராக் மக்கள் அடித்து கொன்றனர்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

பாக்தாத்  - ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இதுவரை 100 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நபரை தெருவில் தனியாக பார்த்த ஈராக் மக்கள் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரண தண்டனை
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க குறிப்பிட்ட சிலரை நியமித்திருந்தனர். அதில் இதுவரை 100கும் மேற்பட்டவர்களுக்கு தலை துண்டித்து மரண தண்டனை வழங்கியவர் அபு சயூப்.

குத்திக்கொலை
இவர் நினைவே பகுதியில் தனியாக சென்று கொண்டிருந்த போது ஈராக்கின் பொதுமக்கள் சிலர் அவரை துரத்தி சென்று சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர். நினைவே பகுதியில் வசித்து வரும் அபு சயப் மிகவும் கொடூரமான கொலைகாரர் என கூறப்படுகிறது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பானது வெளியிடும் பிரச்சார வீடியோக்களில் தோன்றி ஆக்ரோஷமாக பேசும் அபு சயப், தாம் மரண தண்டனை விதிக்கும் நபர்களின் தலைகளை சேகரித்து ஒரு குழிக்குள் பத்திரப்படுத்தி வந்துள்ளதாக பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

தீவிரவாதியும் கொலை
கோபம் கொண்ட பொதுமக்களால் அபு சயப் படுகொலை செய்யப்பட்டிருந்தாலும், குறித்த சம்பவத்தில் அபு சயபின் எதிரி ஒருவருக்கும் முக்கிய பங்கிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் அந்த நபர் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மட்டுமின்றி அவருடன் பயணம் செய்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவரும் இந்த தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இருவேறு கருத்து
மேலும் அபு சயப் கொலை செய்யப்பட்டது குறித்தும் இருவேறு கருத்துகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கோபம் கொண்ட பொதுமக்கள்ளால் குத்தி கொலை செய்திருக்கலாம் என ஒரு சிலரும், இல்லை அபு சயப் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago