முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறையும்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறையலாம் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள  பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார அறிக்கை:

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஆய்வு அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதமாதிரி இன்று பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு முதல் நாளான நேற்று பொருளாதார அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் தாக்கல் செய்தார்.

பொருளாதார அறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் .5 சதவீதம் குறையும் என்று தெரிகிறது. அதேசமயத்தில் அடுத்தாண்டு பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதுமட்டுமல்ல. விவசாயத்தில் சில பொருட்கள் உற்பத்தி குறைவும் காரணமாகும்.

வரிவிதிப்பு:

பொருளாதார வளர்ச்சிக்கு தனிநபர் வருமானத்தில் வரி குறைப்பு செய்வதோடு கம்பெனி வருமாத்திற்கும் வரி குறைப்பு செய்யவேண்டும். அதேசமயத்தில் அனைத்து தரப்பில் இருந்தும் வரும் அதிக வருமானத்தை வரிவதிப்புக்குள் கொண்டுவர வேண்டும். அதாவது விவசாயத்தில் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வரி விதிப்பது குறித்து பொருளாதார அறிக்கையில் குறிப்பிடாவிட்டாலும் அனைத்து அதிக வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியிருப்பது விவசாயத்தை மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கலாம். இதுவரை விவசாய வருமானத்திற்கு வரிவிதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

7.5 சதவீதம்:

கடந்த 2015-2016-ம் ஆண்டில் பொருளாதார ஒட்டுமொத்த வளர்ச்சி 7.6 சதவீதமாக இருந்தது. இது இந்தாண்டு 7.1 சதவீத வளர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டது. இது அடுத்த நிதியாண்டில் அதாவது 2017-2018-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.75 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதம் வரை உயரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பண தட்டுப்பாட்டால் ஒரு சில உற்பத்தி பொருட்கள் குறைந்தன. பால் கொள்முதல் குறைந்தது. தென்மாநிலங்களில் வறட்சியின் காரணமாக கரும்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம் உற்பத்தி குறைந்துள்ளது என்றும் அந்த பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்