முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தி வரும் நலத்திட்ட உதவிகள் குறித்த விளக்க தெருமுனை பிரச்சாரகூட்டம்: கலெக்டர் துவக்கிவைத்தார்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தி வரும் நலத்திட்ட உதவிகள் குறித்த விளக்க தெருமுனை பிரச்சாரத்தினை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே துவக்கி வைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கி பேசியதாவது,‘மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து நகர்புற பகுதி மக்களுக்கு நன்கு தெரியும், ஆனால் கிராமப்புற மக்களுக்கு தெரிவதில்லை. அதற்காகத்தான் இந்த தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கட்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு கட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்வு தளம் அனைத்து அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல, கல்யாண மண்டபங்கள், கடைகள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் கட்டடங்களில் சாய்வு தளம் அமைக்க முன்வர வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பாக மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அதிக அளவில் மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு, அதிகளவில் அரசின் திட்டங்கள், சலுகைகள் வழங்க முடியும்’ என்றார்.தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக எண்ணற்ற திட்டங்களை மாற்றுத்தினாளிகளுக்கு செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக நேற்று மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ள தெருமுனை பிரச்சாரத்தினை கலெக்டர் துவக்கி வைத்தார். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்த விளக்க மடிப்பு கையேடு மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து மொடக்குறிச்சி, நாதகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மாவட்ட கலெக்டர், மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தை பார்வையிட்டு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பா.ஜான்சி, முதன்மை கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன்,  தலைமை ஆசிரியர் ராஜா, டிடிஎச் முதல்வர் லட்சுமி, பிசிடிசி நிறுவன் விஜி, மற்றும் சிறப்பு பள்ளி மற்றும் பார்வையற்றோர் சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அமலராக்கினி பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ.லெவேல் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago