முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைப்பூச திருவிழா பிப்-3 கொடியேற்றத்துடன் தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

 ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகனின் 3-ம் படைவீடான பழனியில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாதயாத்திரைக்கு பிரசித்தி பெற்ற இந்த திருவிழா வரும் பிப்.3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வில்வனம் என்றும், ஊர் கோவில் என்றும் அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் வருகின்ற பிப்பரவரி 2-ந் தேதி வாஸ்து, சாந்திபூஜை, ஆஸ்திர உளா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

 முதல்நாளான பிப்.3-ந் தேதி அதிகாலையில் முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண மண்டபத்தில் 16 வகை அபிN~கம், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைபெறுகிறது. பின்னர் காலை 9.30 மணிக்கு கொடி கட்டி மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று இரவு 7.30 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமார சுவாமி, வள்ளிதெய்வானையிடன் திருஉலா காட்சி நடைபெறுகிறது.
 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினசரி காலை 8.45 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளிதெய்வானையிடன் தந்தப்பல்லக்கில் எழுந்தருளி நான்குரத வீதிகளில் திருஉலா காட்சி நடைபெறுகிறது. தினசரி இரவு 7.30 வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க குதிரை, பெரிய தங்கமயில் வாகனம் ஆகியவற்றில் சுவாமி உலா நடைபெறுகிறது.
 4-ம் நாளான பிப்.8-ந் தேதி அன்று இரவு 7.30 மணிக்கு வள்ளிதெய்வானை முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. இரவு 9.30 மணிக்கு முத்துக்குமார சுவாமி - வள்ளிதெய்வானை திருமண கோலத்தில் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
 பிப்.9-ந் தேதி வியாழக்கிழமை தைப்பூச திருநாளன்று அதிகாலை 5.00 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளிதெய்வானையிடன் தோளுக்கு இனியாள் வாகனத்தில் எழுந்தருளி, சண்முகநதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காலை 10.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் திருக்கோவில் முன்பு தேரில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து தீபாரதனையும் நடந்த பின்னர் தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
 நான்குரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. அன்று இரவு 7.30 மணிக்கு தந்தப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பிப்.12-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.
 தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்து அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் திருவருளை பெற கோவில் இணை ஆணையர்ஃ செயல் அலுவலர்ஃ தக்கார் க.ராஜமாணிக்கம், உதவி ஆணையர்ஃநேர்முக உதவியாளர் இரா.மேனகா ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை  செய்துள்ளனர். திருக்கோவில் மூலம் பாதயாத்திரை பக்தர்களுக்கு அதற்கான முறையான வழிமுறைகளையும், சிறந்த ஏற்பாடுகளையும், சுகாதார வசதியுடன் செய்துள்ளனர். திருக்கோவில் தொடர்பாக தேவைப்படும் விபரங்களை பெற கீழ்கண்ட தொலைபேசி எண்ணகளில் தொடர்புகொள்ளலாம் : 04545 - 242236, 242293, 242325, 245544 இலவச அழைப்பிற்கு எண் : 18004259925 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago