முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி குழந்தைகளுக்கு அளித்தல் தொடர்பான சேவை அமைப்புகளுடன் கலந்தாய்வு கூட்டம்:கலெக்டர்.சி.அ.ராமன், தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசிகளை அளிப்பது குறித்து ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் திரு.சி.அ.ராமன்,  தலைமையில் நடைப்பெற்றது.              இக்கூட்டத்தில் மருத்துவர்கள் மூலம் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், முகாம்கள் சிறப்பாக நடைபெறவும் முழு ஒத்துழைப்பையும் இந்திய மருத்துவ சங்கம் தருவதாகவும், குழந்தைகள் மருத்துவ சங்க மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த எப்போதும் தயாராக இருப்பதாகவும், முகாம் நடைபெறும் காலத்தில் முழு ஒத்துழைப்பு தருவதாகவும், பேனர்கள் மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் மூலம் தங்கள் மருத்துவமனைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் உறுதியளித்தனர்.    விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் கேபிள் டி.வி உள்ளிட்ட அனைத்து வகையிலும் விழிப்புணர்வுகளை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்துவதாக ரோட்டரி சங்கமும் இந்திய செஞ்சிலுவை சங்கம் தனது நிறுவனம் மூலம் மதம் சார்ந்த பள்ளிகம் மற்றும் மதத்தலைவர்களிடையே முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவிகிதம் இலக்கை அடைய ஒத்துழைப்பதாகவும், லயன்ஸ் சங்கம் மாவட்டம் முழுவதும் நடைபெறும் முகாம்களில் ஈடுபடும் மருத்துவ குழுவினர்களுக்கு வாகனம், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சிறு குழந்தைகளுக்கு விளையாட்டு பெம்மைகள் இலவசமாக வழங்குவதாகவும் விழிப்புணர்வு பதாகைகள் வழங்கி முகாம் சிறப்புற ஒத்துழைப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பினைப் பெற்று அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதாகவும் தெரிவித்தனர். மேலும் விழிப்புணர்வு பேனர்களை தங்கள் பள்ளி வளாகத்தில் பொறுத்தியும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு வழங்கும் அழைப்பு கடிதத்தை விநியோகிப்பதாவும் உறுதியளித்தனர்.                இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.சுரேஷ், குழந்தை மருத்துவ துறைத் தலைவர் மரு.தேரணிராஜன், உலக சுகாதார நிறுவன பிரதிநிதி மரு.ராஜுவ்குமார், மருத்துவத் துறை தலைவர் மரு.பிலோமினா, இந்திய மருத்துவ சங்க தலைவர் மரு.சேந்தன், குழந்தைகள் மருத்துவர்கள் சங்க செயலர் மரு.நர்மதா, இந்திய செஞ்சிலுவை சங்க செயலர் மரு.இந்திரநாத், லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்கத் தலைவர்கள், தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.சி பள்ளிகள் சேர்ந்த தலைமையாசிரியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்