முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுதிறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி:கலெக்டர்வா.சம்பத், தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணியை நேற்று கலெக்டர்.வா.சம்பத்,  கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு செயலர் மற்றும் சார்பு நீதிபதி.வி.ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர்பேசியதாவது          தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் இதுவரை 51,640 மாற்றுதிறனாளிகள் அடையாளம் கண்டரியப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்டத்தில் அரசு பார்வையற்றோர் நடுநிலைப்பள்ளி ஒன்றும், அரசு காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளி ஒன்றும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் நடத்தப்படும் மனவளர்ச்சி குன்றியவருக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பங்கள் 12ம், 6 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களுக்கு பயிற்சி மையங்கள் 3ம் செயல்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கென கல்வி உதவித்தொகை, பார்வையற்றோருக்கான வாசிப்பாளர் உதவி தொகை, கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, மன வளர்ச்சி குன்றியோருக்கான உதவித்தொகை, தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித்தொகை, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், பார்வையற்றோருக்கான திருமண நிதி உதவி திட்டம், காதுகேளாதோருக்கான திருமண உதவி தொகை, கை, கால் பாதிக்கப்பட்டோருக்கான திருமண நிதி உதவி தொகை, மாற்றுத்திறனாளி மாற்றுத்திறனாளியை திருமணம் செய்வதற்க்கான திருமண நிதி உதவி, வங்கி கடன் மானியம் போன்ற திட்டங்கள் என மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக சேலம் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார்த்துறையின் வேலைவாய்ப்பு முகாம், தொழில் புரிய வங்கி கடனுதவி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்கள், உரிமைகள், சமவாய்ப்புகள், பங்களிப்புகள், மாற்றுத்திறன் பாதிப்பை முன்னரே கண்டறிதல், வேலைவாய்ப்பு, தமிழக அரசின் திட்டங்கள் என பல்வேறுத்துறைகளின் வல்லுநர்களை கொண்டு கருத்துரை வழங்கப்பட்டது.  விழிப்புணர்வு முகாமில் வங்கி கடனுக்காக 104 மனுக்களும், தாட்கோ மூலம் கடனுதவி பெற 17 மனுக்களும் வரப்பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை 162 நபர்களுக்கும், தனியார்த்துறை வேலைவாய்ப்பு உத்தரவு 21 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோருக்கான நிவாரணம் 11 நபர்களுக்கும், திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் 234 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  இம்முகாம்கள் தொடர்ச்சியாக 01.02.2017 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேட்டூர், 02.02.2017 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் விழிப்புணர்வு கூட்டம், சாலையோர விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. எனவே இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர்வா.சம்பத்,  தெரிவித்துள்ளார்.                 இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, துணை இயக்குநர் வேலைவாய்ப்புதுறை .ஞானசேகரன், இளநிலை மறுவாழ்வு அலுவலர் உலகநாதன், உடலியல் மற்றும் புணர்வாழ்வு மருத்துவர் நித்திய, தொண்டு நிறுவன உறுப்பினர் லாரண்ஸ், சி.எஸ்.ஐ பாலஞான இல்ல மேளாலர்ஜோகோனாகுருபாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago