தருமபுரி மாவட்டம், சந்திராபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 218 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்:கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      தர்மபுரி
2

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சந்திராபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் திரு கே. விவேகானந்தன்,  தலைமையில்  நடைபெற்றது.             இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய் துறையின் மூலம் இலவச வீட்டுமனைப்பட்டா 90 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் 6 பயனாளிகளுக்கும், இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம் 15 நபர்களுக்கும், ளுவு ஜாதி சான்றிதழ் 56 பயனாளிக்கும், புதிய குடும்ப அட்டை 50 பயனாளிகளுக்கும், தற்காலிக ஓய்வூதியம் (வipள) 3 பயனாளிகளுக்கும், வேளாண்மைத் துறையின் சார்பில் இடுபொருள் மற்றும் விதைகள் 9 பயனாளிகளுக்கும்,  தோட்டக்கலைத்துறையின் சார்பில் இடுபொருள் மற்றும் விதைகள் 5 பயனாளிகளுக்கும்  என மொத்தம் 234 பயனாளிகளுக்கு ரூ. 63 இலட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கே இணைந்து மாதந்தோறும் கிராமங்களைத் தேர்வு செய்து மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் முன்மாதிரி கிராமமாக 10 கிராமங்களை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் அரூர் வட்டம், சந்திராபுரம் கிராமம் ஒன்றாகும். இக்கிராமத்தில் பல்வேறு துறையின் மூலமாக முன்னுரிமை அடிப்படையில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம்.  மேலும் இம்முகாம்களில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை வேளாண்மை பொறியியல் துறை, மருத்துவ சுகாதாரத்துறை, புதுவாழ்வுத் திட்டம்  என அரசின் பல துறைகளின் சார்பில் திட்டங்கள் குறித்த பதாகைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான வசதிகளை கேட்டறிந்தனார்கள். வனத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக கோணி (ஆலளழசயளெளை) என்கிற புதிய வகை மரக்கன்றுகளை வழங்கினார். இம்மரவகையில் மரக்கூழ், பழச்சாறுகள் மற்றும் மரவேலைகள் தயாரிக்க பயன்படுகிறது. விவசாயிகள் இம்மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து பயன்பெற வேண்டும். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜாதி சான்று, வருமானம் சான்று,  இருப்பிடச்சான்றிதழ் பெற அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களிலும் விண்ணப்பித்துக்கொள்ளலாம் எனவும், பொதுமக்களுக்கு ஏதேனும் விவரங்கள் அறிய வேண்டுமெனில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் 1077,  1800 425 7016, 1800 425 1071 மற்றும் வாட்ஸ் அப் எண். 8903891077 ஆகிய எண்களின் மூலமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மற்றும் புகார்களையும் கூறலாம். மேலும் அம்மா கைபேசி எண். 1100 எண்ணின் மூலமாக தங்களது குறைகளையும் மற்றும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என கலெக்டர்கே.விவேகானந்தன், தெரிவித்தார். இம்முகாமில்  அரூர் கோட்டாட்சியர்  கவிதா, அரூர் வன அலுவலர்                  செல்வி. எஸ். செண்பகப்ரியா, தனித்துணையாட்சியர் (ச.பா.தி)  குப்புசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  இரா. சண்முகசுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்         அமீர்பாஷா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர்  இலாஹிஜான், தோட்டக்கலை துணை இயக்குநர்  அண்ணாமலை, மாவட்ட தாட்கோ  மேலாளர்  வைத்தியநாதன் உட்பட துறை ரீதியான அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: