முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், நூதன முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      கோவை
Image Unavailable

திருப்பூர் மாவட்டம்,  பொங்கலூர் ஊராட்சி  ஒன்றியம்,  மாதப்பூரில்   நூதன முறையில்  மரக்கன்றுகள் நடப்பட்டு  வளர்க்கப்பட்டு வருவதை  மாவட்ட  கலெக்டர்  ச.ஜெயந்தி   நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து செய்தியாளர்களிடம்  தெரிவித்ததாவது

       திருப்பூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக பல்வேறு வகையான வளர்ச்சிக்கான திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்  சிறப்பான முறையில் மழை பொழியவும், நல்ல காற்றோட்டமான சூழ்நிலைக்கும் மற்றும் பசுமையான சூழல் உருவாக்கிடவும்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பெருமளவில் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நமது மாவட்டத்திற்கு 1,52,735  குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக சென்னை, அரசு முதன்மை செயலர் ஃ வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களின் ஆலோசனையின்படி, வறட்சி காலங்களில் குறைந்த அளவு நீரைக் கொண்டு மரங்கள் வளர்க்கும் (நேற ஐnழெஎயவiஎந ஆநவாழன ழக வுசநந Pடயவெயவழைn) தொழில் நுட்ப முறையில் இயற்கை உரங்களை கொண்டு மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. இம்முறையானது 2 அடி ஆழம், 2 அடி நீளம் மற்றும் 2 அடி அகலம் உள்ள குழி தோண்டப்பட வேண்டும். மணலும் இயற்கை உரமும் சரிபாதி அளவில் கலந்து கொள்ளவேண்டும்.

 மேற்படி குழியில் ஒரு மூலையில் 4” பைப் வைக்க வேண்டும். மேற்படி குழியில் நான்கில் ஒரு பங்கை கலந்து வைத்துள்ள மணலும் இயற்கை உரமும் கொண்டு நிரப்ப வேண்டும்.  பின்னர் மரக்கன்றை  நட்டு தோண்டப்பட்ட மணலைக் கொண்டு குழியினை மூட வேண்டும். பின்னர் 4” பைப்பில் மீதமுள்ள மணல் மற்றும் இயற்கை உரம் கொண்டு நிரப்பி பைப்பை வெளியே எடுக்க வேண்டும். பைப் வைக்கப்பட்ட இடத்தில் தினசரி தண்ணீர் ஊற்றும் போது செடியின் வேரில் ஈரப்பதம் இருப்பதால் வறட்சி காலங்களிலும் மரக்கன்றுகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.   மேலும், இத்தகைய நவீன தொழில்நுட்பம் நான்கு 2” இன்ச் பைப் மூலமாகவும் செயல்படுத்தலாம். நமது மாவட்டத்தில் உள்ள அவினாசி, தாராபுரம், குடிமங்கலம், மூலனூர், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி மற்றும் வெள்ளகோவில் ஆகிய  வட்டாரங்களில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

      மேலும், ஏற்கனவே சாதாரண முறையில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளின் வளர்ச்சிக்கும் புதிய தொழில்நுட்ப முறையின் மூலம் உள்ள வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளின்  வளர்ச்சி விகிதங்கள் அதிகமாக உள்ளன. இத்தகைய நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக தண்ணீரை சேமிக்கப்படுவதற்காகன வாய்ப்புகள் உள்ளன என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள்.

                இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் திட்ட இயக்குநர் குருநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago