முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்புகின்றனர் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தாகம் தீர்க்கின்றன

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      ஈரோடு
Image Unavailable

யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்து தாகங்களை தீர்த்து கொள்கின்றன.ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதி கடந்த 2013–ம் ஆண்டு மார்ச் 13–ந் தி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. 1,409 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான இந்த புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், பவானிசாகர், டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன.இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, புள்ளிமான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

கடும் வறட்சி

 தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் பருவ மழை பொய்த்து விட்டது. இதன்காரணமாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. அதுமட்டுமின்றி வனப்பகுதியில் உள்ள செடிகள், கொடிகள், மரங்கள் காய்ந்துவிட்டன. மேலும் வனப்பகுதியில் உள்ள வனக்குட்டைகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் இல்லை.இனால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. அவ்வாறு புகுந்து விடும் வனவிலங்குகளால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள பயிர்கள் சேதப்படுத்தப்படுகின்றன.

குடிநீர் தொட்டி

 எனவே வனவிலங்குகள் வெளியேறுவதை தடுக்க வனப்பகுதியில் வனத்துறை சார்பில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு மலைவாழ் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.அதன்படி 7 வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் ஏற்கனவே வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது.

டேங்கர் லாரி மூலம் தண்ணீர்

 இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டிக்கு வாடகை டேங்கர் லாரிகள் மூலம் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.அதுமட்டுமின்றி குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ள இடத்தில் வனத்துறையினர் தானியங்கி கேமரா பொருத்தி உள்ளனர். இந்த கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் எந்தந்த வனவிலங்குகள் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்து செல்கின்றன என வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

யானைகள் கூட்டம் கூட்டமாக...

இந்த நிலையில் கேர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து தங்களுடைய தாகத்தை தீர்த்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.இதுகுறித்து வனத்துறை அதிகரிகள் கூறுகையில், ‘வரும் கோடை காலத்தில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்படும்,’ என தெரிவித்தனர்.(photo in)

பள்ளி ஆண்டு விழா

ஈரோடு பிப்1- ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள கீதாஞ்சலி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12  ஆம் ஆண்டு விழாபள்ளி அரங்கில் நடைபெற்றது. பள்ளி தலைவர் பி.எம் கோபாலன்  தலைமை தாங்கினார்  முதல்வர் சுப்பு லட்சுமி முன்னிலை வகித்தார். விழாவில் எல்.கே.ஜி முதல் 12 ஆம்வகுப்பு வரை உள்ள  மாணவ மணவிகளின் குழு நடனம்,தனி நடனம்,மேற்கத்திய நடனம், உட்படபல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் சுதா மருத்துவ மணை மருத்துவர் சுதாகர்சிறப்புவிருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குபரிசுகள் வழங்கிபேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்