முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவான்மியூரில் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள கத்தி முனையில் பணத்தை கொள்ளையடித்த 9 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      சென்னை

சென்னை ஜாபர்கான்பேட்டை, பிள்ளையார் கோயில் தெரு,முகவரியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(31), என்பவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். ஹரிகிருஷ்ணன் தான் வைத்துள்ள பழைய ரூபாய் நோட்டு ரூ.70 லட்சத்தை மாற்றித்தருமாறு எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த அவரது நண்பர் கோகுல்ராம் (31) என்பவரிடம் கூறியுள்ளார். அதற்கு கோகுல்ராம், அவருக்கு தெரிந்த நபரான தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் நிஜாமுதீன் பழைய பணத்தை எடுத்துக் கொண்டு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் அருகில் வரச்சொல்லியிருந்தார்.அதன்பேரில், ஹரிகிருஷ்ணன் அவரது 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை பையில் எடுத்துக்கொண்டு, நண்பர் கோகுல்ராமுடன் கொண்ட அவரது குடிசவரநேச காரில் கடந்த 26.01.2017 அன்று 12.30 மணியளவில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் குளம் அருகில் உள்ள காலியிடத்திற்கு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் மகேந்திரா ஓருஏ காரில் வந்த முகமது நிஜாமுதீன் மற்றும் 8 பேர் கொண்ட கும்பல், ஹரிகிருஷ்ணன் மற்றும் கோகுல்ராமை தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி, 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள், 4 சவரன் தங்க நகை ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து ஹரிகிருஷ்ணன் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன்பேரில், தரமணி உதவி ஆணையர் நேரடி மேற்பார்வையில், திருவான்மியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சம்பவ இடம் அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், குற்றவாளியின் செல்போன் எண்ணை வைத்து தீவிர புலன் விசாரணை செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.முகமது நிஜாமுதீன் (29)தண்டையார்பேட்டை, 2.சந்தோஷ் (30) (பி.டெக்., படித்தவர்), தண்டையார்பேட்டை, 3.பாபு (எ) டில்லிபாபு (24), ஊத்துக்கோட்டை, 4.அப்பு (எ) உமாமகேஷ் (25), தியாகராயநகர், 5.முருகேசன் (26), வியாசர்பாடி, 6.சதீஷ்குமார் (36), ராயபுரம், 7.ஜெய் (எ) ஜெய்குமார் (27), வியாசர்பாடி, , 8.வினோத் (32), ராயபுரம், 9.சக்திவேலு (23), ராயபுரம், ஆகிய 9 பேரை நேற்று முன் தீனம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள், 4 சவரன் தங்க நகை மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய கூசூ11 ஓ 0390 பதிவு எண் கொண்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட பாபு (எ) டில்லிபாபு என்பவர் 4 முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டவர் என்பதும், அப்பு (எ) உமாமகேஷ் என்பவர் கேட் ராஜேந்திரன் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி என்பதும், முருகேசன் மீது 2014ம் ஆண்டு வழக்கில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்