முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரத்தில் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் கிளை இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் அரசு பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நேற்று நடந்தது. காஞ்சி கிளைத்தலைவர் சரவணன், டாக்டர்கள் விக்டோரியா, பொன்ஆதிரை, ஜீவரத்தினம், சரஸ்வதி, ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் துரைவேல், பேராசிரியர் பூபதி, ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் தொழுநோய் லெப்ரா பாக்டிரியா என்ற கிருமியினால் உருவாகிறது. இது தொற்றுநோய் அல்ல. இந்நோய்க்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே தொழுநோயை கண்டறிந்தால், தொடர் சிகிச்சை அளித்து முற்றிலுமாக குணப்படுத்தலாம். நோயின் அறிகுறிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை உதாசீனப்படுத்தாமல் அரவணைத்து மற்றவர்களை போல் இயல்பாய் வாழ உதவுவோம். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் கூட்டுமருந்து சிகிச்சை வழங்கி, தொழுநோயற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்று மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago