முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியினை கட்டுப்படுத்திட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் : கலெக்டர் சு.கணேஷ் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      புதுக்கோட்டை

டெங்குக் காய்ச்சல் என்பது ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ் காய்ச்சல் ஆகும். இந்த கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. நாம் வீட்டில் பயன்படுத்தும் தொட்டிகள், பிளாஸ்டிக் பேரல்கள் உட்பட அனைத்து நீர் சேமிப்பு கலன்கலிலும் மழை நீர் தேங்கும் தேவையற்ற டப்பாக்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள், பூந்தொட்டிகள் ஆகியவை மற்றும் குளிர்சாதனபெட்டி, பிரிட்ஜ் ஆகியவற்றில் காணப்படும் நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன.

 

கொசு ஒழிப்பு

 

எனவே, ஏடிஸ் கொசுக்களை அழித்திட சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு உற்பத்திக் கலன்களை கண்டறிந்து அப்புறப்படுத்துதல், கொசுப்புழுக்கொல்லி மருந்திடுதல், கொசு ஒழிப்பு புகை மருந்தடித்தல் ஆகிய பணிகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்தப் பணிகள் நடைபெற அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். நீண்ட நாட்கள் பூட்டப்பட்டிருக்கும் வீடுகளின் உள்ளே தொட்டிகள் மற்றும் தேவையற்ற கலன்களில் தேங்கியிருக்கும் நீரில் வளரும் ஏடிஸ் கொசுக்கள் டெங்கு தடுப்புப் பணிக்கு பெரும் சவாலாக உள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீட்டருகில் பூட்டப்பட்டிருக்கும் வீடுகளின் உரிமையாளரை தொடர்பு கொண்டு மேற்கண்ட ஏடிஸ் கொசு ஒழிப்பு பணி நடைறெ சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மேலும், நீர் சேமிப்பு கலன்களை கொசுக்கள் புகாதவாறு நன்றாக மூடி வைக்கவும், வாரம் இருமுறை பிளிச்சிங் பவுடர் கொண்டு தேய்த்துக் கழுவி உலர்ந்த பின் பயன்படுத்தவும் வீட்டைச் சுற்றி டயர்கள், தேங்காய் ஓடுகள் உபயோகமற்ற நீர் தேங்கும் பொருட்களை போடாமல் செய்வதன் மூலம் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியினை கட்டுப்படுத்திட முடியும் இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்