முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணமடைந்த ராணுவவீரர்கள் இருவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி திருமங்கலம் ஒன்றியம் பள்ளக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டி மற்றும் கள்ளிக்குடி ஒன்றியம் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு ராணுவவீரர் தாமோதரகண்ணன் ஆகியோர் மரணமடைந்ததை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.20லட்சம் நிவாரண நிதியை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.

ராணுவவீரர் சுந்தரபாண்டி மரணம்;: திருமங்கலம் அருகேயுள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி-தமிழச்செல்வி தம்பதியரின் மகன் சுந்தரபாண்டி(25).விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக பல்வேறு தியாகங்கள் செய்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.இவருக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணமாகி சிவபிரியா என்ற மனைவி உள்ளார்.சிவபிரியா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில் சில நாட்களாக ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 25ம் தேதி பந்திப்போரா மாவட்டம்,குரெஸ் செக்டாரில் ராணுவ முகாம் இருந்த பகுதியில் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது.இந்த பனிச்சரிவில் ராணுவவீரர்கள் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இந்த பனிச்சரிவில் சிக்கி திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டியின் சடலமும் இருந்ததை மீட்புபடையினர் கண்டுபிடித்து மீட்டனர். ராணுவவீரர் தாமோதரகண்ணன் மரணம்: இதனிடையே மீட்பு படையினர் மோப்பநாய்கள் உதவியுடன் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் பனிச்சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5ராணுவ வீரர்hகளை மீட்டு அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.எனினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5ராணுவவீரர்களும் உயிரிழந்தனர்.

இதில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம்-காட்டுராணி ஆகியோரது மகனான தாமோதரகண்ணன்(26) என்பவர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.டிப்ளமோ பட்டதாரியான தாமோதரகண்ணன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத்தில் சேர்ந்ததும் தற்போது காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகில் உள்ள ராணுவமுகாமில் பீரங்கிபடையில் வீரராக பணியாற்றி வந்துள்ளார்.தற்போது பனிச்சரிவில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவரது சகோரார் ஹரீஷ்குமார் என்பவர் தற்போது இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றி வருகின்றார். தலா 20லட்சம் நிவாரணநிதி அறிவிப்பு: திருமங்கலம் அருகேயுள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டிமற்றும் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு ராணுவவீரர் சுந்தரபாண்டி ஆகிய இருவர் பணிச்சரிவில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்ததை தொடர்ந்து இவ்விரு கிராமங்களும் சோகத்தில் மூழ்கின.மேலும் உடல்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படும் வரையில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்,கூட்டமாக திரண்டிருந்த கிராமமக்கள் கதறியழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைப்பதாக இருந்தது.

இந்நிலையில் உயிரிழந்த ராணுவவீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்;பில் நிவாரண நிதியாக தலா.ரூ.20லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். விமானம் மூலம் உடல்கள் மதுரை வருகை: இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவவீரர்களின் உடல்கள் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு 11மணிக்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ராணுவீரர்கள் அணிவகுப்புடன் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்பட்ட ராணுவவீரர்களின் உடல்களுக்கு பழைய விமானநிலையம் முன்பாக மரியாதை செலுத்திடும் நிகழச்சி நடைபெற்றது.அப்போது தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;, மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்,மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.,மாவட்ட எஸ்.பி.(பொ)சக்திவேல் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து வணங்கிமரியாதை செலுத்தினார்கள்.இதையடுத்து ராணுவ வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு ராணுவத்தினர் புடைசூழ கொண்டு செல்லப்பட்டது. நிவாரணநிதி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்: இந்நிலையில் பள்ளக்காபட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட ராணுவவீரர் சுந்தரபாண்டியின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் சுந்தரபாண்டியின் பெற்றோர் சின்னச்சாமி-தமிழச்செல்வி மற்றும் மனைவி சிவபிரியா ஆகியோரிடம் தமிழக அரசின் சார்பில் நிவாரணநிதியாக ரூ.20லட்சத்திற்காக காசோலையை அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் வழங்கி ஆறுதல் கூறினார்.பின்னர் கே.வெள்ளாகுளத்தில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு ராணுவவீரர் தாமோதரகண்ணனின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,கலெக்டர் கொ.வீரரகவராவ் ஆகியோர் மலர்வளையம் வைத்த அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் மரணமடைந்த தாமோதரகண்ணனின் பெற்றோர் மாணிக்கம்-காட்டுராணி ஆகியோரிடம் தமிழக அரசின் சார்பில் நிவாரண நிதியாக ரூ.20லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி ஆறுதல் கூறினார்.

21குண்டுகள் முழங்க இறுதிச்சடங்குகள்: இதனிடையே நேற்று காலை பள்ளக்காபட்டி சுடுகாட்டில் ராணுவவீரர் சுந்தரபாண்டியன் உடலுக்கு 21துப்பாக்கி குண்டுகள் முழங்கிட இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது.அப்போது பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து சுந்ரபாண்டிக்கு இறுதியஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் கே.வெள்ளாகுளம் சுடுகாட்டில் ராணுவவீரர் தாமோதரகண்ணனின் உடலுக்கு 21குண்டுகள் முழங்கிட இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது.அப்போது சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி நிகழ்சிகளில் கலந்து கொண்டோர்: மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ்,வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன்,மாவட்ட கழக துணை செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி செயலாளர்கள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி, திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ரமேஷ்,திருப்பரங்குன்றம் ஒன்றிய துணை செயலாளர் நிலையூர்முருகன்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,சாமிநாதன்,வேல்முருகன்,சிவன்காளை,பிரபுசங்கர்,கண்ணன்,தாத்தப்பன்,பாண்டியன்,அன்னக்கொடி,சுகுமார்,நிரஞ்சன்,சிவா,உசிலம்பட்டி ஆர்.டி.ஓ சுகன்யா, திருமங்கலம் தாசில்தார் மலர்விழி,துணை தாசில்தார் தனபாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள்,அரசுஅலுவலர்கள் ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago