முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நெய்ல் கோர்சர்ச் நியமனம்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்காவில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பணியிடத்துக்கு நெய்ல் கோர்சர்ச் (49) என்பவரை அதிபர் டொனால்டு டிரம்ப் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

பணியிடம் காலி
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த அன்டோனின் ஸ்காலியா கடந்த ஆண்டு பிப்ரவரியில் மரணம் அடைந்தார். காலியாக இருந்த அந்த பதவிக்கு அதிபராக இருந்த ஒபாமா, மெர்சிக் கார்லேண்டு என்பவரை நியமித்தார். அதற்கு செனட் சபையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. மெஜாரிட்டியாக உள்ள குடியரசு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணியிடம் காலியாகவே இருந்தது.

குறைந்த வயது நீதிபதி
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நியமன அறிவிப்பை வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் இருந்து அதிபர் டிரம்ப் அறிவித்தார். அப்போது நெய்ல் கோர்சர்ச் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆக அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றார். அதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் சுப்ரீம் கோர்ட்டின் மிக குறைந்த வயது நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தற்போது இவர் கொலொரடோவை சேர்ந்தவர். கொலொரடோ மேல் முறையீட்டு கோர்ட்டு நீதிபதியாக பதவி வகிக்கிறார்.

ஜனநாயக கட்சி எதிர்ப்பு
அதைத்தொடர்ந்து புதிய அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் காலியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பணியிடத்துக்கு நெய்ல் கோர்சர்ச் (49) என்பவரை நேற்று முன்தினம் நியமனம் செய்தார். அவரது நியமனம் வெளிப்படையானது. அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவரது நியமனத்தின் மூலம் அமெரிக்க மக்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளேன் என டிரம்ப் தெரிவித்தார். ஆனால், இவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago