காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த ஆண்டைப்போல் 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி செய்ய திட்டம்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      கிருஷ்ணகிரி

காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து இந்த ஆண்டு 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் வாழும் காதலர்களால் வருகிற 14&ம் தேதி (செவ்வாய் கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தில் ரோஜா பூக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிலவும் குளிர்ந்த சீதோஷண நிலை மற்றும் மண்வளம் காரணமாக இந்த பகுதியில் அதிக அளவில் ரோஜாப்பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் திறந்த வெளியிலும், பசுமை குடில்கள் அமைத்தும் ரோஜாக்கள் பயிரிட்டு வருகிறார்கள்.இங்கு பர்ஸ்ட்ரெட், கிரான்ட்கால, ரெட்ரோஸ், தாஜ்மஹால், நொப்ளஸ் உள்பட 45 வகையான ரோஜாக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் காதலர் தினத்திற்கு மட்டும் ஓசூரில் இருந்து ஒரு கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கிருந்து லண்டன், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா,ஜப்பான் அரபுநாடுகளானகுவைத்,கத்தார்,பரைன் போன்ற நாடுகளுக்கு ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சர்வதேச சந்தையில் இஸ்ரேல், கென்யா போன்ற நாடுகளின் போட்டிகள் இருந்ததாலும் ஓசூரில் இருந்து அதிக அளவில் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்படடுளளது. இருந்தது. இந்த ஆண்டும் இஸ்ரேல், ஹாலாந்து நெதர்லாந்து, கென்ய உள்ளிட்ட நாடுகளின் பூக்கள் தரம் நன்றாக இருப்பதாலும் அந்த நாடுகளின் உற்பத்தி செலவு குறைந்து உள்ளது. இருந்தாலும் கிருஷ்ணகிரி மாவட்ட பூக்கள் போட்டி போடும் அளவிற்கு விவசாயிகள் உள்ளனர்.இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாச்சலம் (எ) பாபு கூறியதாவது:&இஸ்ரேல்,கென்யா, போன்ற நாடுகளில் ரோஜா பூக்களின் உற்பத்தி செலவு குறைந்து உள்ளது. மேலும் இங்குதரமான ரோஜாக்கள் உற்பததி செய்வதால் ஓசூர் பகுதி ரோஜாக்களுக்கு மவுசு உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு 3 கோடி ரோஜாக்கள் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளோம். மேலும் சென்னையில் நடந்த கூட்டத்தில் 4 வருடத்திற்கு ஒரு முறை என இரண்டு முறை பசுமை குடில் அமைக்க 50 சதவீதம் மான்யம் வழங்க வேண்டும்.விவசாயிகள் லோன் பெறாவிட்டாலும் குளிர்சாதன கிடங்கு அமைக்க மான்யம் தர வேண்டும்.ஏற்றுமதி செய்யும் மலர்களுக்கும்,உள்நாட்டிற்கு விமானத்தின் மூலம் அனுப்பும் பூக்களுக்கும் விமான செலவை மான்யமாக வழங்க வேண்டும்.மேலும் ராஜ்தானிஎக்ஸ்ப்ரஸ் ரயிலில் இரண்டு பெட்டிகளுக்கு ஏசி அமைத்து தர வேண்டும்.ஒரு டன் முதல் 4 டன் வரை பாரம் ஏற்றும் வாகனங்கள் வாங்க விவசாயிகளுக்கு மான்யம் வழங்க வேண்டும். உட்பட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதை ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளனர். இது போன்ற சலுகைகள் விவசாயிகளுக்கு தரும போது கண்டிப்பாக பூ உற்பத்தியின் விலை குறைவாக இருக்கும். விவசாயிக்கு லாபம் தரும் தொழிலாக மாறும். என்றார்.திருச்சிப்பள்ளி சிறு விவசாயி முனிராஜ் கூறியது: மேல் நாடுகளில் விவசாயம் செய்ய போது மான நிலம் இலவசமாக தருகின்றனர்.மேலும் தண்ணீர் போதுமான அளவிற்கு கிடைக்கிறது. ரோஜ செடிகளுக்கு தேவையான உறங்கள் கூட அங்கு மிகுந்த மலிவாக கிடைக்கிறது. இதனால் அந்த விவசாயிகளுக்கு ரோஜ மலரின் உற்பத்தி மிக குறைந்த செலவில் உற்பத்தியாகிறது. தற்போது இங்கு ஒரு பூவுக்கு ரூ 2 முதல் ரூ 2.50 வரை செலவாகிறது. போதுமான மழை இல்லாததால் போர்போட்டாலும் தண்ணீர் இல்லை. குளிர்பதன கிடங்கு இல்லாதவர்கள் மிக,மிக சிறமம் அடைந்துள்ளனர்.மழை நீரில் ரோஜ வளர்த்தால் நல்ல தரமுள்ள மலர்களாக கிடைக்கும் நல்ல மழை தற்போது இல்லாததால் தண்ணீருக்கும் சிறமமாக உள்ளது. மின் சார செலவும் மிக அதிகமாக உள்ளது. இதை எல்லாம் அரசு கவனம் கொண்டு விவசாயிகளுக்கு போத மான சலுகைகள் அளித்தால் விவசாயிகள் முன்னேற்றம் காண முடியம் என்றார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: