மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் தான் மாற்ற வேண்டும் காவல் துணைக் கண்காணிப்பாளர் பேச்சு

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      விழுப்புரம்
1K1FOTO

 

கள்ளக்குறிச்சி,

 

மாணவர்களுக்கு போதிய கல்வி அறிவு இல்லாததால் மாணவர்கள் அரியாத வகையில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் கள்ளக்குறிச்சி தமயநதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் செவ்வாய்க்கிழமை பேசினார்.

 

கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் கோட்டத்துக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, வரஞ்சரம், சின்னசேலம், கீழ்க்குப்பம், கச்சிராயப்பாளையம், கல்வராயன்மலை, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் குப்புசாமி தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் பாண்டியன், மணிமாறன் முன்னிலை வகித்தனர். காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி வரவேற்றார். கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் குப்புசாமி பேசுகையில்: ஒவ்வொரு பெறறோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினை நம்பி அனுப்பி வைக்கின்றனர். மாணவர்களுக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் அனைத்தும் நீங்கள்தான். மாணவர்களை அடித்து சாதிக்க முடியாது நாங்களும் தற்போது தடியடி. செய்வதில்லை. மாணவர்கள் அதிக நேரம் வீட்டில் இருப்பதைவிட பள்ளியில் உங்களுடன்தான் உள்ளனர். மாணவர்களின் எதிர் காலம் ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. தற்போது வளர்ந்துள்ள அறிவு பூர்வமான விஞ்ஞான உலகில் மாணவர்கள் விருப்பதற்கு ஏற்ப பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி பகுதியில் சிறுவர்கள் திருமணம் அதிக அளவில் நடக்கின்றது. அறியாத வயதில் திருமணம் செய்து கொள்வதால் அவர்களது வாழ்க்கை பாதிக்கின்றது. மாணவர்களுக்கு போதுமான கல்வி அறிவு விழிப்புணர்வு இல்லாததால் இது போன்ற சம்பவம் நடக்கின்றது. இதனை தடுப்பதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி அவர்களது மனநிலையினை மாற்ற வேண்டும். மாணவர்களை தங்களது பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வகுப்பு ஆசிரியர்களும் வகுப்பில் உள்ள மாணவர்களின் தன்மையினை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு நல்வழியினை ஆசிரியர்களால் மட்டுமே ஏற்படுத்திதர முடியும். பள்ளிக்கு மாணவர்கள் வரவில்லை என்றால் அவர்களது வீட்டிற்கு உடனே அலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளியில் மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் உடனே 108 தகவல் தெரிவித்து மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் வாழ்க்கை சிறந்து விளங்கும் வகையில் ஆசிரியர்கள் செயல்பாடு இருக்க வேண்டும். உங்கள் பகுதியில் பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டால் அலைபேசி மூலம் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என காவல் துணைக் கணாப்பாளர் குப்புசாமி பேசினார்.

 

நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட அரசு, தனியார் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்

பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் மட்டும் அல்லது பொது அறிவினை தூண்டும் வகையில் நடத்துவதை எடுத்துறைத்தனர். முடிவில் காவல் உதிவி ஆய்வாளர் இருதயராஜ் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: