சத்துணவு பணிக்கு நேர்கானல்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      கடலூர்

 

கள்ளக்குறிச்சி,

 

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 19 சத்துணவு அமைப்பாளர்கள், 71 சமையல் உதவியாளர் பணியிடம் நிறப்புவதர்காக நேர்கானல் 31.1.17, 1.2.17, 2.2.17 ஆகிய மூன்று நாட்கள் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நடைபெறுகின்றது.

 

நேர்கானல் குழுவில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் கள்ளக்குறிச்சி அண்ணாமலை, உதவி தொடக்க கல்வி அலுவலர் ஷெலின், வட்டார வளர்ச்சி அலுவலர் அ.கல்யாணசுந்தரம் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் 629 பேர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

நேர்கானல் ஏற்பாட்டினை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முஸ்தபா ஏற்பாடு செய்திருந்தார். இதே போல் தியாகதுருகம், சின்னசேலம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்: