முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பணத்தை மீட்க கோரி தருமபுரியில் மனிதசங்கிலி போராட்டம்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி:பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட பணதட்டுப்பாட்டை நீக்கவும், கருப்பு பணத்தை கைப்பற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பணத்தட்டுப்பாடு எதிர்ப்பு நடவடிக்கை குழு சார்பில் தருமபுரி அரசு மருத்துவமனை அருகில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. மக்கள் சொந்த பணத்தை எடுக்க எந்த கட்டுப்பாடுகளும் வைக்ககூடாது, காசற்ற பொருளாதாரத்தில் மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடனை ரத்துசெய்யவேண்டும். கிராமபுற நுாறு நாள் வேலை திட்ட ஒதுக்கீட்டை இரண்டு மடங்காக்கவேண்டும். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் உயிரிழந்த மக்களக்குஇழப்பீடு வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட சிறுநடுத்தர தொழிலாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கவேண்டும். கூட்டுறவு வங்கிகள் மீதான அதீதகட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும். மாநிலஅரசுகளுக்கு ஆகிற கூடுதல் செலவினத்தை ஈடுகட்ட நிதி ஒதுக்கவேண்டும். ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி ரேசன் அளிப்பை நிறுத்தகூடாது. ஜல்லிகட்டுக்கு நிரந்தர தீர்வுகேட்டு அமைதியாக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மனிதசங்கலி போரட்டதிற்க்கு சிஐடியு மாவட்ட செயலாளர் சி. நாகராஜன் தலைமைவகி்த்தார்.  மாவட்டதலைவர் எம்.மாரிமுத்து துவக்கிவைத்தார். தொலை தொடர்பு ஊழியர் சங்க மாவட்டசெயலாளர் பி. கிருஷ்ணன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டசெயலாளர் ஏ.சேகர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலதலைவர் பி.டில்லிபாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின மாவட்டசெயலாளர் கே.என்.மல்லையன் அகிலஇந்திய விவசாயதொழிலாளர் சங்கத்தின் மாவட்டசெயலாளர் எம்.முத்து அனைத்திந்திய ஜனநாயாக மாதர் சங்கத்தின மாவட்டசெயலாளர் எஸ்.கிரை1ாமேரி  இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்டசெயலாளர் ஏ. மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்