முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவூர் இருபாட்சீஸ்வரன் கோயிலில் ரூ.40லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணி செய்ய பூமி பூஜை.

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

ஆரணி அடுத்த சேவூர் இருபாட்சீஸ்வரன் கோயிலில் ரூ.40லட்சம்  மதிப்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ள புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.   ஆரணி அடுத்த சேவூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  இருபாட்சீஸ்வரன் கோயிலில் ரூ.40லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணியினை  மேற்கொள்ள புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. இதில் இந்து சமய  அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டார். இக்கோயிலில் முருகர், அம்மன், இராமலிங்கசுவாமிகள், கணபதி சிலைகள்  புதுப்பித்தல், நுழைவு வாயில், தரைதளம் அமைத்தல், நந்தவனம் அமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல், மடப்பள்ளி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை  மேற்கொள்ள ரூ.40லட்சம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஒதுக்கப்பட்டு பூமி பூஜை துவக்கப்பட்டது.   இதில் முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் க.சங்கர், பாசறை மாவட்ட செயலாளர்  ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் மாவட்டகவுன்சிலர் ஜெ.சம்பத், கைத்தறி பிரிவு  நிர்வாகி  குமரவேல், முன்னாள் ஊராட்சித்தலைவர் பெருமாள், முன்னாள் ஒன்றியகவுன்சிலர்  திருமால், கிளைசெயலாளர் பாலசந்தர், அறநிலையத்துறை ஆய்வாளர் நடராஜன், செயல்அலுவலர்கள் சசிகலா, பெரியமருதுபாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago