முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடிஅண்ணாமலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பவித்திரம், சு.கம்பப்பட்டு, வெறையூர், அடிஅண்ணாமலை உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தமிழ்நாடு மாநில சமூக தணிக்கை சங்கம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 2014-15, 2015-16ம் ஆண்டுகளுக்கான சமூக தணிக்கை கிராம சபா கூட்டம் நேற்று நடைபெற்றது. அடிஅண்ணாமலை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்திற்கு மூத்த குடிமகன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.வி.மனோகரன் தலைமை தாங்கினார். தி.மலை ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனகுமார், வட்டார வள அலுவலர் எஸ்.ரணிதா ஆகியோர் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துக்கூறினர். மேலும் மக்களிடம் நிறைகுறைகளும் கேட்டறியப்பட்டது. கடந்த 23ந் தேதி முதல் நேற்று வரை ஊராட்சிகளில் ஒருவாரம் சமூக தணிக்கை நடைபெற்றது. இதன்தொடர்ச்சியாக நேற்று சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு கிராம சபா கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி வழிகாட்டுதலின்பேரில் தி.மலை ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் மு.சுந்தரமூர்த்தி மேற்பார்வையில் அடிஅண்ணாமலை ஊராட்சி செயலர் எஸ்.வி.முருகன் செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்