முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் (பொ) ப.காந்திமதி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் (பொ) ப.காந்திமதி  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (01.02.2017) நடைபெற்றது.

 

மாநகராட்சி ஆணையாளர் (பொ)  தெரிவிக்கையில் “மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்  தலைமையில் ஐந்து மண்டலங்களிலுள்ள உதவி ஆணையாளர்களின் மேற்பார்வையில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் ஐந்து மண்டலங்களிலும் திங்கள் முதல் வெள்ளி வரை, அதாவது  திங்கட்கிழமை அன்று மத்திய மண்டலத்திற்கும், செவ்வாய் கிழமை அன்று கிழக்கு மண்டலத்திற்கும், புதன் கிழமை அன்று மேற்கு மண்டலத்திற்கும், வியாழக்கிழமை அன்று தெற்கு மண்டலத்திற்கும், வெள்ளிக் கிழமை அன்று வடக்கு மண்டலத்திற்கும் நாள்தோறும் அந்தந்த வார்டுகளுக்குச் சென்று பொது மக்களிடம் மனுக்கள் பெற்று வருகின்றது.

இந்த நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனமானது தொடர்ந்து நாள் தோறும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. மேலும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாகனமானது தொடர்ந்து ஐந்து மண்டலங்களிலும் சென்று பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுவருகிறது.

மேலும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்  தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 2017 முதல் ஐந்து மண்டலங்களில் மாதத்தின் முதல் வாரம் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் பொதுமக்கள் மனுக்களை ஆனையாளர்ஃதனி அலுவலரிடம் வழங்கப்பட்டு வருகிறது.

 

அதனை தொடர்ந்து மாதத்தின் முதல் நாளான இன்று (01.02.17) மேற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் (பொ) தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைத் தொட்டிகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல், அடிப்படை வசதி என பல்வேறு உதவிகள் கோரி 10 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்ட்டது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் (பொ) ப.காந்திமதி  தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில் உதவி ஆணையர் கே.ராமைய்யா, மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர், உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்