முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர் கூட்டம்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் நடைபெற்ற முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் நிதியுதவி வழங்கினார்.

                சிறப்பு கூட்டம்

முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஊட்டியிலுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமையில்

நடைபெற்றது. இச்சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் படைவீரர்கள் மற்றும் அவரைச் சாந்தோர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்கள் வாயிலாக தெரிவித்தனர்.

                    நிதியுதவி

 மேலும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் கைப்பெண் 6 நபர்களுக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரமும், போரில் ஊனமுற்ற படைவீரர்களைச் சார்ந்தோர்கள் மற்றும்  ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக ரூ.25 ஆயிரம் வீதம் 5 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும், மகளின் திருமணத்திற்கு திருமணமானியமாக தலா ரூ.20 ஆயிரம் வீதம் 2 நபர்களுக்கு ரூ.40 ஆயிரமும், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகையாக 9 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரமும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்திற்கான நிதியுதவிகளை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago