முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நசியனூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் செய்தியாளர் பயணத்தின்போது ஆய்வு செய்தார்.

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், நசியனூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட கலெக்டர் .எஸ்.பிரபாகர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் நசியனூர் பாரதி கல்வி நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களை நேரில் சந்தித்து கல்வியின் தரம், இக்கல்வி நிறுவனத்தில் போதிய அளவிற்கு வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா,  மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு தினந்தோறும் சீருடைகள் அணிந்து வருகிறார்களா, முறையாக சத்துணவு வழங்கப்பட்டு வருகிறதா என மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   கேட்டறிந்தார். மேலும் இக்கல்வி நிறுவனத்தில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவினை பார்வையிட்டு தரமாக வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

 நசியனூர் ஏபி.023 நியாயவிலைக்கடையில் மாவட்ட கலெக்டர் .எஸ்.பிரபாகர்  நேரில் பார்வையிட்டு அங்கு இருப்பில் வைக்கப்பட்டுள்ள பொதுவிநியோகப் பொருட்கள், இதுவரை வழங்கப்பட்டதற்கான பதிவேடுகளையும் பார்வையிட்டு சரிவர பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். மேலும் ஆதார் எண் இதுவரை எவ்வளவு குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்ற விவரத்தையும் கேட்டறிந்தார்.

சத்தியமங்கலம் வட்டம் வரதம்பாளையத்தில் உள்ள பெரிய குளத்தினை மாவட்ட நிர்வாகத்துடன் ஸ்ரீபண்ணாரி அம்மன் ரூரல் பவுண்டேசன் இணைந்து தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள பொறியாளர்களிடம் இப்பணிகளை துரிதமாக மேற்கொள்வதோடு விரைவில் முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பொது இசேவை மைய செயல்பாட்டினையும் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   நேரில் பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களிடம் பொது இசேவை மையம் தங்களுக்கு போதிய அளவிற்கு பயனுள்ளதாக இருக்கின்றதா என்று கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்டத்திற்கு பயிற்சிக்கு வருகை புரிந்துள்ள இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் பிரியங்காஆலா, அங்கர் லேதர், .அபிஷேக் மீனா, .டி.எஸ்.சேத்தன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்