முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமைக் கருவேல் மரங்கள் முழுவதும் பிப்-6க்குள் அகற்ற வேண்டும் - கலெக்டர் சிவஞானம்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்  -மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல் மரங்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்,  ஆய்வு.

  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி சீமைக் கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பாக பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறை ஊரக வளர்;ச்சித்துறை, நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்,  தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு மற்றும் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலங்களில் வளர்ந்துள்ள வேலி மற்றும் சீமைக் கருவேல மரங்களினால் பூமியின் நீர்வள ஆதாரம் குறைந்து விடுகிறது.   மேலும் மேற்படி மரங்கள் அதனைச் சுற்றியுள்ள வளிமண்டல  ஈரப்பத்தையும் உறிஞ்சி கோடைக்காலங்களில் கூட மிகவும் செழிப்பாக வளர்ந்து, மழை பெய்யும் வாய்ப்பினையும் தடுத்துவிடுகிறது.  மனிதனுக்கு சுவாசம் தொடர்பான  உடல் உபாதைகள் ஏற்படவும் காரணமாக அமைந்துள்ளது.   நமது மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் தென்மேற்கு பருவ மழை பொய்த்துவிட்ட நிலையில், எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும், சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கவும், நமது மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள வேலி மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும்பணி துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும்,  வேலி மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியினை தொடர்ந்து கண்காணித்து உத்தரவு பிறப்பித்து வருகின்றது.

அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள விலை மதிப்பில்லாத சீமைக் கருவேல் மரங்களை உடனடியாக அகற்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விலைமதிப்புள்ள மரங்களை இதர துறைகளுடன் வனத்துறையும் கூட்டுப் புலத்தணிக்கை செய்து கூட்டாக மரங்களை மதிப்பீடு செய்து அவற்றினையும் துரிதமாக அகற்றிட வேண்டும் என்றும், பட்டாதாரர்கள் தங்கள் நிலங்களில் வளர்;ந்துள்ள சீமைக் கருவேல் மரங்களை 06.02.17- ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் தவறினால் அரசு செலவில் அகற்றப்பட்டு செலவினத் தொகையினை 2 மடங்காக சம்மந்தப்பட்ட பட்டாதாரர்களிடம் வசூல் செய்யப்படும் என்றும், மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் இதர பகுதிகளில் வளர்ந்துள்ள மரங்களை 10.02.17 –க்குள் அகற்றிட வேண்டும் என்றும்,  சீமைக் கருவேல் மரங்களின் தீமைகள் குறித்தும், அவற்றினை அகற்ற வேண்டிய அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீமைக் கருவேல் மரங்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்,  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்..

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.கிருஷ்ணம்மாள் (சாத்தூர்), திருமதி.செல்வி (அருப்புக்கோட்டை) மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago