கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலைகள் மாற்று மையத்திற்கு கொண்டு செல்லப்படும் சட்டசபையில் எம்.எல்.ஏ கே.ஏ பாண்டியன் கேள்விக்கு அமைச்சர் பதில்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலைகள் படிப்படியாக மாற்று மையத்திற்கு கொண்டு செல்லப்படும் சட்டசபையில் சிதம்பரம் எம்.எல்.ஏ கே.ஏ பாண்டியன் கேள்விக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்தார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்த்தின் கீழ் தமிழக சட்டப்பேரவை 01.02.2017 அன்று கூடியதும் கேள்வி நேரத்தின் போது சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பேசுகையில்..

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய கொள்ளிடம் ஆற்றில் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காலங்களில் திறந்து விடபபடும் நீரில் அதிக அளவில் முதலைகள் அடித்து வரப்படுகின்றன. மனித உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள் இம் முதலைகளால் பொது மக்கள் பலர் தங்களது கை மற்றும் கால்களை இழந்துள்ளனர். மேலும் அவ்வப்போது உயிர்பலியும் ஏற்படுகின்றது. இதனை தடுக்கும் பொருட்டு பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலைகளுக்கென்று பண்ணை ஒன்று அமைத்து தருமாறு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிஜ்த்து பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள், மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகில் சுமார் 20 இலட்சம் செலவில் முதலைகளுக்கென்று மாற்றும் மையம் ஒன்றை ஏற்படுத்தினார். சிதம்பரத்திலிருந்து பிடிக்கப்படும் முதலைகள் இம் மாற்று மையத்திற்கு அனுப்பப்பட்டு பின்னர் நீர் நிலைகள் பாதுகாப்பாக விடப்படும் என்றார். மேலும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பேசுகையில் இம் முதலைகளால் கொள்ளிட கரையோரம் வசிக்கும் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். தமிழகத்தில் முதலைப் பண்ணைகள் நிரந்தரமாக திருப்பூர் கோட்டம் அமராவ்தி ஆனைமலை புலிகள் காப்பகத்திலும், திருவண்ணாமலை திற்கு கோட்டம் சாத்தனூரிலும் தருமபுரி கோட்டம் ஒகேனக்கல் போன்ற இடங்களில் உள்ளது. சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையினை பரிசீலித்து கொள்ளிடம் ஆற்றில் பிடிக்கப்படும் முதலைகளை இம் மூன்று முதலைப் பண்ணைகளில் மாற்றுவதற்கு ஆவன செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: