முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.எஸ்.பி மெட்ரிக் பள்ளி ஆண்டுவிழா

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
Image Unavailable

தென்காசி

தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள யு.எஸ்.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகூடத்தில் 13-வது ஆண்டுவிழா நடந்தது. பள்ளி தாளாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சகாய செல்வமேரி வரவேற்றார். யு.எஸ்.பி. கல்வியியல் கல்லூரி முதல்வர் ஏ.மணிகண்டன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்.டி.மணிகண்டன் ஆகியோர் பேசினர். பள்ளிகூட முதல்வர் சிவகுமரன் ஆண்டறிக்கை வாசித்தார். நெல்லை, கன்னியாகுமரி மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் பாலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை ஸ்ரீலதா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பார்வதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்