முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்ப்பின் குடியேற்ற தடை உத்தரவுக்கு அமெரிக்காவில் வலுக்கும் எதிர்ப்பு போராட்டம்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் அதிரடியாக பிறப்பிக்கும் உத்தரவுகள், சர்வதேச நாடுகளை மட்டுமின்றி அமெரிக்கர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அவர் இயற்றிய குடியுரிமை தடை உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.

அதிரடி உத்தரவுகள்

அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே சொந்தம் என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட டொனால்டு டிரம்ப், அதிபர் பொறுப்பை ஏற்றவுடன் அதை செயல்படுத்தும் வகையில் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

ஒபாமா செயல்படுத்தி வந்த சுகாதார திட்டத்திற்கு நிதியை குறைத்த டிரம்ப், அமெரிக்க குடியுரிமை கொள்கையிலும் மாற்றம் செய்து உத்தரவை பிறப்பித்தார். மத்திய கிழக்கு வட ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தடை செய்யும் உத்தரவையும் அவர் பிறப்பித்தார். இதன்படி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் விமான நிலையங்களிலேயே கைது செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நியூயார்க் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago