முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதமங்கலம் புதூர் அரசு பள்ளியில் 328 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்:பன்னீர்செல்வம் எம்எல்ஏ அரசின் வழங்கினார்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஆதமங்கலம் புதூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இவ்விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக ஜி.அண்ணாதுரை தலைமை தாங்க, தலைமை ஆசிரியர் இரா.நீலமேகம் அனைவரையும் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் கே.எல்.வி. ராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ 328 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட கழக துணை செயலாளர் எல்.என்.துரை, மாவட்ட மாணவரணி செயலாளர் பீரங்கி ஜெ.வெங்கடேசன், ஒன்றிய கழக செயலாளர் எம்.திருநாவுக்கரசு, பொதுக்குழு உறுப்பினர் பி.பொய்யாமொழி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.கோவிந்தராஜ், ஊராட்சி கழக செயலாளர் ஏ.கார்த்திகேயன், கிளை செயலாளர் ஆர்.இளையராஜா, மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் கே.எஸ்.ரமேஷ், அதிமுக பிரமுகர் மாதுரை இளங்கோ, உள்பட ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், முக்கிய பிரமுகர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago