முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் ஸ்ரீகோபாலகிருஷ்ண ஸ்வாமி கோவில் மஹாகும்பாபிஷேகம்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

 தேனி - பெரியகுளத்தில் 600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீகோபாலகிருஷ்ண ஸ்வாமி கோவில் பராமரிப்பின்றி இருந்து வந்தது. இப்பகுதி மக்கள் இக்கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்ய தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்; அவர்களிடம் முறையிட்டனர். அவருடைய முயற்சி மற்றும் ஏற்பாட்டில் இக்கோயிலை புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. முதல் நாளான கடந்த செவ்வாய்கிழமை காலையில் புண்யாஹ வாசனமும், மாலையில் பூர்ணாஹ{தி உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றது. புதன்கிழமை காலையில் ஆவாஹனம் உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றன.  மாலையில் மஹாசாந்தி ஹோமமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று  காலையில் யாகசாலையில் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் யாகசாலையிலிருந்து கும்பங்கள் எடுத்து வரப்பட்டு கோவிலை வலம் வந்து கோவில் விமான பகுதியில் உள்ள கும்பத்தில்  புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
            பின்னர் அப்புனித நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. புதன்கிழமை மாலையில் நடைபெற்ற சிறப்பு ஹோமம் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் ஒ.பி.ரவீந்திரநாத்குமார், வி.ப.ஜெயபிரதீப் உள்ளிட்ட தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து ஸ்ரீகோபாலகிருஷ்ண ஸ்வாமிகளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு  அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
        இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் நா.வெங்கடாசலம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம்,  பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கதிர்காமு,   நகர்மன்ற தலைவர்கள் கம்பம் சிவக்குமார், தேனி முருகேசன், பெரியகுளம் ஒ.ராஜா, நகர செயலாளர் என்.வி.ராதா, துணை செயலாளர் அப்துல்சமது, அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ்,   ஏர்செல் ரபீக் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள்  மற்றும்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பத்திர எழுத்தர்  நாகராஜன் உள்ளிட்ட திருப்பணிக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்