முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்: கலெக்டர்மு.ஆசியா மரியம் அறிவுரை

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், செல்லப்பம்பட்டி, காரைக்குறிச்சி புதூர், பாச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கலெக்டர்மு.ஆசியா மரியம்   திடீர் ஆய்வு மேற்கொண்டார். செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்குறிச்சிபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரில் சென்ற கலெக்டர் அவர்கள்  அரசு பொதுத்தேர்வினை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டுமென்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுடன் அறிவுரை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது, மாணவ, மாணவியர்களாகிய உங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளாகும். இதனைக்கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாணவ, மாணவியரும் படிப்பில் முழுக்கவனம் செலுத்தி நன்றாகப்படித்திட வேண்டும். பாடங்களைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை திரும்ப திரும்ப எழுதிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் மனதில் அப்பாடங்கள் நன்றாகப்பதியும். படிக்கும்பொழுது பாடத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருக்குமானால் உடனடியாக ஆசிரியர்களிடம் கேட்டறிந்து அச்சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு, பாடங்களை படித்திட வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவியரும் நாம் கட்டாயம் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் நன்கு பதியவைத்து பாடங்களை படித்தால் நிச்சயம் அதிகமதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற முடியும். இதனை கருத்தில் எல்லா மாணவ, மாணவியர்களும் நன்றாகப்படித்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று உங்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வதோடு, தாங்கள் பயின்ற பள்ளிக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பெருமையை தேடித்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர்மு.ஆசியா மரியம்  பேசினார்.அதனைத்தொடர்ந்து பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக இருக்கின்றனவா என நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தலைமையாசிரியர்களிடம் கேட்டறிந்தார். பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் முழுமையாக இருக்கின்றது என தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் அப்பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு சென்ற ஆட்சியர் அவர்கள் அங்கு குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டிருந்த சாதம், வேகவைத்த முட்டை ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் குழந்தைகளுக்கு தரமான உணவுகளை சமைத்து வழங்கிட வேண்டுமென சத்துணவு சமையலர் மற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு உத்தரவிட்டார்.     இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் உட்பட பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்