முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு உலர் தீவனம் பசுந்தீவனம் மற்றும் தாது உப்புக்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது:கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      தர்மபுரி

தருமபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர்தீவனம், பசுந்தீவனம் மற்றும் தாது உப்புக்கள் வழங்க  தமிழக அரசு ரூ.3 கோடியே 16 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.  நமது மாவட்டத்தில்  பருவமழை பெரும்பாலான பகுதிகளில் பொய்த்துப்போனதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலை உருவாகியுள்ளது. மேய்ச்சலுக்கு புல் இல்லாததாலும் சோளம், மக்காச்சோளம் விளையாததாலும், கால்நடை தீவன உற்பத்தி குறைந்து, தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கால்நடைகளுக்கு உலர் வைக்கோல் தீவனத்தை மானிய விலையில் வழங்க தமிழக அரசு வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்திற்கு ரூ. 2 கோடியே 26 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வைக்கோல் ரூ.2-க்கு மானிய விலையில், ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 3 கிலோ வீதம் வழங்கப்படும். அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு வாராந்திர தேவை அடிப்படையில் வாரம் ஒருமுறை தொடர்ச்சியாக 2 அல்லது 3 மாதங்களுக்கு தீவனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தீவனம் வழங்க 21 மையங்களில்  (செட்டிக்கரை, கடகத்தூர், மணலூர், இண்டூர், நல்லம்பள்ளி, ஜருகு, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூர், மாராண்டஅள்ளி, கும்மனூர், கோட்டூர், காரிமங்கலம், கொட்டுமாரனஅள்ளி, மகேந்திரமங்கலம், அரூர், மொரப்பூர், கோட்டப்பட்டி, மோளையனூர், புட்டிரெட்டிபட்டி மற்றும் ஏ.பள்ளிப்பட்டி) உலர் தீவனக்கிடங்குகள் தொடங்கப்படவுள்ளன. அவற்றிற்கான டென்டர் ஓரிரு வாரங்களில் விடப்பட்டு விவசாயிகளுக்கு தீவனம் வழங்கப்படும். இதற்காக ஒரு மையத்திற்கு ரூ.10 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வறட்சி நிவாரண திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலத்தில் பசுந்தீவனப்பயிர்  வளர்ப்புத் திட்டமும் செயல்பட இருக்கிறது. இதற்கு ரூ.10 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வறட்சி நிவாரண திட்டத்தின்கீழ் 2016-17-ம் ஆண்டில் நமது மாவட்டத்தில் கால்நடைகளுக்கான பசுந்தீவன சோளப்பயிர் உற்பத்தி செய்ய 50 சதவீதம் அரசு மான்யத்தில் 500 ஏக்கரில் செயல்படுத்த உள்ளது. நீர்பாசன வசதியுள்ள நிலமுள்ள விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்தில் தீவன சோளப்பயிர் (55-60 நாட்கள்) சாகுபடி செய்திட ஒரு ஏக்கருக்கு ரூ.4000ஃ- செலவாகும். இதில் அரசு 50 சதவீதம் மானியம் ரூ.2000ஃ- வழங்குகிறது. அவர்கள் பயிரிடும் பசுந்தீவனம் சொந்த பயன்பாட்டுக்கு போக மீதியை மார்க்கெட் விலைக்கு தேவைப்படும் விவசாயிகள் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கால்நடை வளர்க்கும் உறுப்பினர்களுக்கும் விற்பனை செய்துக்கொள்ளலாம். மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை தங்களது பகுதிக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில் அளிக்கலாம்.       மேலும், வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் கறவையிலுள்ள பசுக்கள், எருமைகள் மற்றும் கிடாரிகள் நல்ல முறையில் பால் கறக்கவும் சினைபிடிக்கும் திறன் குறையாமலிருக்கவும் தருமபுரி மாவட்டத்தில் 64,000 பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு ஒரு மாட்டுக்கு 2 கிலோ வீதம் ரூ.89 இலட்சம் செலவில் தாது உப்பு பாக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளது என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago