முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூரில் 1358 மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள்:அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஒசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 763 மாணவிகளுக்கும்,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த - 595 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழச்சியானது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை (பொ) தருமதி.கே.தமயந்தி அவர்கள் வரவேற்புறையாற்றினார்.பின்பு  கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது: இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை ஆக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்அனைத்துதுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வந்தார்கள், அதுமட்டுமல்லாமல் கல்வியில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் கடந்தாண்டு 1-லட்சம் கோடி நிதியை கல்வித்துறைக்கு ஒதுக்கினார்.வேளாண்மைத் துறையில் 25 லட்சம் மெட்ரிக்டன் உற்பத்தியில், தற்பொழது 1-லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக்டன் உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழகம் தொழில்த்துறையில் 3-வது இடத்தை வகித்துள்ளது என்றால் மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான். அத்தனைத் திட்டங்களும் தாயுள்ளத்தோடு அனைத்து தரப்பு மக்களுக்கும் நிறைய திட்டங்களை வழங்கியுள்ளது மறைந்த முதலமைச்சர் அம்மா.இன்று மட்டும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த - 763 மாணவிகளுக்கும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த - 595 மாணவர்களுக்கும் என மொத்த 1358 மாணவமாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கபடுகிறது. இந்த மிதிவண்டி பயன்படுத்துவதன் மூலம் மாணவஃமாணவிகள் பள்ளிக்கு நேரத்திற்க்கு  வரமுடியும், நல்ல உடற்பயிற்சி ஏற்படுத்துவதோடு, மனோதைரியமும் உண்டாகிறது. எனவே மாணவ ஃ மாணவியர்களாகிய நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் மறைந்த முதலவர் அம்மா அவர்களின் கனவை நணவாக்க வேண்டும் தொடர்ந்து தமிழக அரசின் திட்டங்கள் வழங்கபடும்  என அமைச்சர் அவர்கள் பேசினார்.இந்நிகழச்சியின் போது மாவட்ட கல்வி அலுவலர்  எம்.எஸ்.மல்லிகா, பெற்றோர் ஆகியோர் கழகத் தலைவர்கள்  கே.நாரயணன்,ஏ.கே.ஹரப்கான், முன்னாள் நகர மன்றத் தலைவர் எம்.ராமு, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் – ஜே.பி.ஜெயபிரகாஷ் கலந்து கொண்டனர்.நிறைவில் .அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை  என்.லதா அவர்கள் நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்