முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமுத்திரம் கிராமத்தில் அரசின் சாதனைகளை விளக்கும் ஒன்றிய அளவிலான புகைப்படக் கண்காட்சி : கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      திருச்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சமுத்திரம் கிராமம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனைகளை விளக்கும் ஒன்றிய அளவிலான புகைப்படக் கண்காட்சி பல்வேறு துறைகளை ஒருங்கினைத்து நடத்தப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

 

திட்டங்கள்

 

மணப்பாறை வட்டம் சமுத்திரம் கிராமம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இப்புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சியில் முன்னாள் முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான பசுமை வீடு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள், பெண்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர், விலையில்லா அரிசி, தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்குதல், அம்மா உணவகம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட விபரங்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

இப்புகைப்படக்கண்காட்சியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:

அரசின் சாதனைகள், திட்டங்கள் பற்றி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் வாயிலாக தொடர்ந்து வெளிவந்தாலும், இதுபோன்று மக்கள் கூடும் இடங்களில் ஒன்றிய அளவிலான புகைபடக் கண்காட்சி அமைக்கும் போதுதான், திட்டங்கள் பொதுமக்களை எளிதாகச் சென்றடையும். குறிப்பாக, இங்கு ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஒரு மாதிரி கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கழிப்பிடத்தின் அருகே பொது சுகாதாரத்துறையின் சார்பில் சுகாதாரத்தின் முக்கியத்துவம், சுகாதாரமின்மையால் ஏற்படும் நோய்க்கிருமிகள் பற்றி விரிவாக புகைப்படங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது, பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் கட்டாயம் கழிப்பறை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவாகும்.

மேலும், தமிழக முன்னாள் முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, இல்லத்தரசிகளின் இன்னலைப் போக்கும் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பசுமை வீடுகள் போன்ற திட்டங்களின் சாதனைகள் பற்றியும் ஒன்றிய அளவிலான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இப்புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜி.ராஜராஜன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் மீனாட்சி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர்கள் உதுமான்முகைதீன், மாவட்ட வழங்கல் அலுவலர் வேலுமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலஅலுவலர் முத்துவடிவேல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஷ்வரி, உதவி மகளிர் திட்ட அலுவலர் காமராஜ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, மணப்பாறை வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்