முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ரூ.32 லட்சத்து 08 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினிகள் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 168 மாணவ மாணவியர்களுக்கும், ஏ.டி.ஜெ தர்மாம்பாள் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 44 மாணவ மாணவியர்களுக்கும் ரூ.32 இலட்சத்து 08 ஆயிரத்து 635 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி தலைமையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

 

மடிக்கணினி

 

விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது,

"கல்வியறிவில் இந்தியாவிலேயே கேரள மாநிலம் தான் முதலிடத்தில் இருந்தது. புரட்சித் தலைவி அம்மா தமிழக மக்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டுமானால், அனைவரும் கல்வி கற்றவர்களாக இருந்தால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பென்சில் முதல் 14 வகையான உபகரணங்கள் வழங்கிடவும், ஏழை மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிடவும் பல சிறந்த திட்டங்களை செயல்படுத்திட வழிவகுத்தார்கள்.. நிதிநிலை அறிக்கையில் கல்வி வளர்ச்சி செயல்பாடுகளுக்காக ரூ.30,000 கோடியினை ஒதுக்கியுள்ளார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் நகர்ப்புறத்தில் உயர்ந்தும், கிராமப்புறத்தில் குறைந்தும் இருப்பதுபோல் ஒரு தோற்றம் இருந்தது. புரட்சித் தலைவி அம்மா தமிழக பள்ளி மாணவ மாணவிகளின் கல்வித் தரம் மேம்படும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளார்கள். அதன் விளைவாக இன்று கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களை மிஞ்சும் அளவிற்கு கல்வித் தரம் உயர்ந்து காணப்படுகிறது. மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும் என்று இல்லாமல், நன்கு கல்வி கற்று அதிக மதிப்பெண் பெற்றால் தான், இன்றைய போட்டி நிறைந்த உலகில் முன்னேற்றப் பாதையில் நடை போட முடியும். கண்டிப்பாக நம் மாணவர்களுக்கு நுண்ணறிவு அதிகமாக இருக்கிறது. அதனை மென்மேலும் வளர்த்துக் கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். "முயன்றால் தான் முடியும்..", "முடியாதது ஏதுமில்லை..", சாதிக்கப் பிறந்தவர்கள் மாணவர்கள்.."

 

உயர்ந்த நிலை

 

மாணவ மாணவிகள் இந்த மடிக்கணிணிகளை நல்ல விஷயங்களுக்காக மட்டும் பயன்படுத்திக் கொண்டு, தம் கல்வித்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சாதாரண மனிதன் கூட முயற்சி செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும். முயற்சி எடுத்து படித்தால், அதிக மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறந்த நிலையை அடைய முடியும்.

விடாமுயற்சியுடன் போராடினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். எனவே மாணவ, மாணவியர்கள் தமிழக அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கவேண்டும.;." என தெரிவித்தார்.

விழாவில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆசைமணி, நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.சந்திரமோகன், வெளிவை பால்.கூ.சங்கத் தலைவர் குணசேகரன் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி தாளாளர் பண்டேரிநாதன், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago