முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு தூர்வாரும் பணி முடிந்தது

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      ஈரோடு

ஈரோடு சூரம்பட்டிவலசில் பெரும்பள்ளம் ஓடைக்கு குறுக்கே 1964–ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை 10 அடி ஆழமும், 12 ஏக்கர் பரப்பளவும் கொண்டது. தடுப்பணை கட்டப்பட்டு 52 ஆண்டுகள் ஆகியும் ஒருமுறை கூட அணை தூர்வாரப்படவில்லைஅதனால் அணையின் ஆழம் குறைந்ததுடன், பரப்பளவும் சுருங்கியது. அதுமட்டுமின்றி அணைக்கட்டு பகுதியை ஆக்கிரமித்து பலர் வீடுகள் கட்டியிருந்தனர். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சூரம்பட்டி அணைக்கட்டு மற்றும் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த சுமார் 600 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டனஅதன்பின்னர் சூரம்பட்டி அணைக்கட்டை தூர்வாரும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18–ந் தேதி தொடங்கியது.ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் அனுமதியுடன் தூர்வாரும் பணியை ஈரோடை அமைப்பு தீவிரமாக மேற்கொண்டது.

 12 அடி உயரம்

இந்த பணியில் 5 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அணைக்கட்டு தூர்வாரும் பணி முழுமையாக நிறைவடைந்து விட்டதால் அணை பரந்து விரிந்து காணப்படுகிறது. தற்போது 10 அடி ஆழம் வரை அணைக்கட்டு ஆழப்படுத்தப்பட்டு அதன் மண் கரைகளில் கொட்டப்பட்டு உள்ளது.கரைகளில் கொட்டப்பட்ட மண் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் சுமார் 12 அடி உயரத்துக்கு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அணைக்கட்டின் நடுப்பகுதியில் இருந்த ஒரு மரம் பிடுங்கப்படாமல் அதை சுற்றி மண் போடப்பட்டு திட்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மண் திட்டு பறவைகள் அமர்வதற்கு வசதியாக இருக்கும்படி அமைக்கப்பட்டு உள்ளது. சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் நிறைவடைந்து விடும் என்று, ஈரோடை அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்