முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊருக்குள் புகுந்த கரடி குட்டியை தொட்டில் கட்டி காட்டில் கொண்டு விட்டனர்

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      ஈரோடு

கடம்பூர் வனப்பகுதி தொண்டூர் வனக்கிராமத்தில் நேற்று முன் தினம் சுமார் 4 வயது மதிக்கத்தக்க கரடி குட்டி புகுந்தது.அந்த குட்டியை காட்டுக்குள் கொண்டு போய் விட்டனர்ஈரோடு மாவட்டம் கடம்பூர் வனப்பகுதி தொண்டூர் வனக்கிராமத்தில் நேற்று முன் தினம் சுமார் 4 வயது மதிக்கத்தக்க கரடி குட்டி புகுந்தது.அப்பகுதியில் உள்ள குட்டை அருகே படுத்துக்கொண்ட அந்த கரடி காட்டுக்குள் போக மறுத்தது.பொதுமக்கள் பல்வேறு வகைகளில் காட்டுக்குள் விரட்ட எடுத்த முயற்சியும் தோல்வி அடைந்தது.இதையொட்டி வனக் கிராம மக்கள் சத்தியமங்கலம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
காட்டுக்குள் விட்டனர்

அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்வனத்துறையினரும் அந்த கரடி குட்டியை காட்டுக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால் அந்த கரடியோ காட்டுக்குள் போக அடம் பிடித்தது. மேலும் அந்த கரடி உடல் நலம் குன்றி போயும் இருந்தது.இதனால் மயக்க ஊசி போட்டு பிடிக்க முதலில் முடிவு செய்த வனத்துறையினர் பிறகு உடல்நலம் குன்றி இருந்த கரடி குட்டியை வேறு வகையில் பிடிக்க முடிவு செய்தனர்.அதன்படி ஒரு பெரிய தார்பாய் மூலம் வனத்துறையினர் கரடிகுட்டி மீது பாய்ந்து தார்பாயை அதன் மீது போட்டு அமுக்கி பிடித்தனர். பிறகு கால்களை கயிறு மூலம் கட்டினர்.தொடர்ந்து ஒரு மூங்கில் மரத்தில் தொட்டில் அமைத்து அதில் அந்த கரடி குட்டியை கட்டி வனத்துறையினர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடந்து சென்றனர்.மல்லியம்மன் வர்க்கம் வனப்பகுதியில் இறக்கி கால்களின் கட்டை அவிழ்த்து அந்த காட்டுக்குள் கரடியை விட்டு விட்டு வந்து விட்டனர்.(

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago