சிங்கவரம் அரங்கநாத சுவாமி ஆலயத்தில் ரத சப்தமி திருவிழா

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      விழுப்புரம்
DSC 0795 senji

செஞ்சி,
செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் அருள்மிகு ஸ்ரீஅரங்கநாதர் ஆலயத்தில்
திருப்பதி திருமலையில் நிகழ்வது போன்று ஸ்ரீஅரங்கநாத பெருமாளும் ஒரே
நாளில் ஏழு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலை வந்து பக்தர்களுக்கு
அருள்பாலித்தார். காலை 6 மணிக்கு தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏழு வாகனங்களில்மாலை 6 மணி வரை ரத சப்தமி நடைபெற்றது.
காலை 6 மணிக்கு மேளதாளம் முழங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி
சமேத ஸ்ரீஅரங்கநாதசுவாமி மாடவீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தார்.
இதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு சேஷவாகனத்திலும், காலை 10 மணிக்கு
கருடசேவை(எ)பெரியதிருவடி வாகனத்திலும், பகல் 12 மணிக்கு குதிரை
வாகனத்திலும், 1 மணிக்கு விசேஷ அலங்கார திருமஞ்சனத்திலும், 2 மணிக்கு
அனுமந்த வாகனத்திலும், மாலை 4 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் அரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி
அளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்

 

 

 

 

 

 

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: