முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகதிகளுக்கு எதிரான டிரம்பின் பேச்சு : நோபல் பரிசு வென்றவர்கள் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அகதிகளுக்கெதிரான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின்  பேச்சை, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஜுவான் மேனுவல் சண்டோஸ் உள்ளிட்ட பலர் வன்மையாக கண்டித்துள்ளனர்.
உள்நாட்டு யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்த எஃப்.ஏ.ஆர்.சி. கொரில்லா குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பிய அதிபர் ஜுவான் மேனுவல் சண்டோஸ்க்கு வழக்கப்பட்டது.  அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்களுக்கான நான்கு நாள் மாநாடு கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில்  நடைபெற்றது.

ஜுவான் மேனுவல் சண்டோஸ்:
இதில் சமீபத்தில் மெக்ஸிகோ மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, டிரம்பின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார் சண்டோஸ்.
ஜுவான் மேனுவல் சண்டோஸ் கூறியபோது, "வெறுப்பு பேச்சின் மூலம், பாரபட்சமும், அகதிகள் பிரச்சினையும், புலம்பெயர்ந்தவர்களை நிராகரிக்கும் அபத்தமும் பயத்தின் பிடியில் இருக்கும் உள்ளங்களை வெற்றிக் கொண்டுவிட்டதாக கருதும்போது, மனிதம் பற்றி இங்கே பேசுவதற்கு என்ன இருக்கிறது?" என்றார்.

தவாக்கோல் கர்மன்:
இதேபோல், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஏமன் நாட்டைச் சேர்ந்த தவாக்கோல் கர்மன்னும் டிரம்பின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். கோஸ்டா ரிகா நாட்டின் அதிபர் ஆஸ்கர் அரைசா, சமூக ஆர்வலர் ஜோடி வில்லியம்ஸ் ஆகியோரும் டிரம்பின் நடவடிக்கையை விமர்சித்தனர்.

டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ள அகதிகள் கொள்கை
டிரம்ப் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, சிரியா  நாட்டு அகதிகளுக்கு விசா வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படுகிறது. டிரம்ப்பிடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை சிரியா நாட்டு மக்களுக்கு  அமெரிக்க விசா கிடையாது. தற்போது, பரிசீலனையில் இருக்கும் விசா படிவங்கள்கூட கருத்தில் கொள்ளப்படாது. மேலும், பார்டர் ரெஃப்யூஜி புரோகிராம் எனப்படும் எல்லையில் காத்திருக்கும் அகதிகள் நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேறுவதற்கான திட்டத்தை 4 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். இது முஸ்லிம்களை அமெரிக்காவுக்குள் வரவிடாமல் டிரம்ப் நிகழ்த்தும் கெடுபிடி என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago