முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணை சோதனை : சீனா நடத்தியது

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

 பெய்ஜிங் - அமெரிக்காவுடன் போர் மூளும் என்று கருதப்படும் நிலையில், சீனா 10 அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய புதிய ஏவுகணை சோதனையை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராணுவ வலிமை :
கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதியில் ராணுவ கட்டமைப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கையை எடுப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னுடைய ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில், சீனா கடந்த மாதம் டிஎப்-5சி என்ற புதிய ஏவுகணை சோதனையை நடத்தியதாகவும் இதை அமெரிக்க உளவு அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வாஷிங்டன் ப்ரீ பீக்கன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

1980 களில் ஏவுகணை சோதனை:
10 அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று பல்வேறு இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஷாங்சி மாகாணத்தில் உள்ள தையுவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து மேற்கு சீனாவின் பாலைவனப்பகுதியை நோக்கி ஏவப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 1980-களில் டிஎப்-5 ஏவுகணை சோதனையை சீனா நடத்தியது. இந்த ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வகை தான் டிஎப்-5சி என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவிடம் இப்போது சுமார் 250 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா மதிப்பீடு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago